Latest News :

இது நடந்தால் நடிப்பதையே விட்டுவிடுகிறேன்! - சவால் விட்ட சந்தீப் கிஷன்
Tuesday July-02 2019

’யாருடா மகேஷ்’, ‘மாநகரம்’, ‘நேஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம் ‘கண்ணாடி’. இதில் ஹீரோயினாக அன்யா சிங் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார்.

 

சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்குகிறார். வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.

 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சுந்தீப் கிஷன், அன்யா சிங் உள்ளிட்ட படக்குழுவினர அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய சந்தீப் கிஷன், “டீஸர் பார்த்த பலரும் நேர்மறையான கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் படம் வெளியாகும் என்ற நிலை இருக்கிறது. நான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகின்றது. நான் எனக்காக படம் நடிக்கவில்லை. பார்வையாளர்களுக்காக தான் நடிக்கிறேன். ஆனால் இப்பொழுது படம் நடிப்பது என்றால் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு படமும் வெளியிடுவதற்கு போராட வேண்டியிருக்கிறது.

 

இப்டத்திற்காகவும் ஒவ்வொருவரும் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். தரமான படமாக வரவேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்திக்கிறோம். இப்படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே எடுத்திருக்கிறோம்.

 

‘மாயவன்‘ படத்தை ஆன்லைனில் பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். இதன் பிறகு ‘கசடதபற’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்படம் வெளியாகும் போது எல்லோராலும் பேசும் படமாக இருக்கும்.

 

எல்லோரும் பேய் மற்றும் விலங்குகளை வைத்து படமெடுத்தால் வெற்றியாகும் என்றார்கள். ஆகையால் எந்த பின்னணியில் எடுத்தால் வெற்றியாகும் என்று கூறினாலும், அதை விடுத்து நான் எப்போதும் வித்தியாசமாகத் தான் நடிப்பேன் என்று கூறுவேன்.

 

இப்படத்தில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கதையின் அடிப்படை மாறும். மேலும், 2043 வருடத்திலிருந்து ஆரம்பிக்கும். எதிர்காலத்தில் ஆரம்பித்து நிகழ்காலத்தில் முடியும்.

 

இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படத்தைத்தான் தயாரிக்க வேண்டும் என்று தோன்றியது. இப்படத்தைப் பார்த்து முடித்ததும் இது பேய் படம், என்று யாராவது கூறிவிட்டால் இனிமேல் நடிப்பதையே விட்டுவிடுகிறேன்.” என்று சவால் விட்டார்.

 

Kannadi Movie

 

இயக்குநர் கார்த்திக் ராஜு பேசுகையில், “உள்குத்து வெளியான பிறகு சரியாக போகவில்லை. இதுபற்றி என் நண்பர்களுடன் கலந்தாலோசிப்பேன். அப்போது தான் இந்த கதை உதித்தது. 3 நாட்களிலேயே எழுதி முடித்து விட்டேன். சுப்பு சாரிடம் கதையை கொடுத்தேன். அவர் படித்து முடித்ததும் இப்படத்தைத் தயாரிக்க ஒப்புக் கொண்டார். தெலுங்கில் கொண்டு போக வேண்டும் என்று சந்தீப் விரும்பினார். ஆனால், எனக்கு தெலுங்கில் ஒரு வார்த்தைக் கூட தெரியாது என்றேன். அதற்கு அவரே உதவி புரிந்து தெலுங்கில் தானே தயாரிப்பதாகவும் கூறினார். சண்டை காட்சிகள் சவாலாகவே இருக்கும். சந்தீப் மற்றும் கருணாகரனின் காட்சிகள் அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும். இப்படத்தில் கடினமாக உழைத்தது நாயகி அன்யா சிங் தான். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளும் தெரியவில்லை என்றாலும் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் மாற்றி மாற்றி நடித்தார்.

 

இப்படம் பெற்றோர்களுக்கு மிகவும் பிடிக்கும் விதமாக திடமான கருத்தைக் கூறும் படமாக இருக்கும்

 

என்னுடைய முதல் படமான ‘திருடன் போலீஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு என் அப்பா, படம் நன்றாக இருக்கிறது. ஆனால், புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறினார். ஆனால் இப்படத்தில் காட்சிக்குத் தேவைப்பட்டதால் வைத்திருக்கிறேன்.” என்றார்.

 

ஹீரோயின் அன்யா சிங் பேசுகையில், “இப்படம் எனக்கு முதல் தமிழ் படம். தமிழ் படத்தில் அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தில் காதல், த்ரில்லர், நகைச்சுவை, அனைத்தும் கலந்திருக்கும்.” என்றார்.

 

தயாரிப்பாளர் விஜி சுப்புரமணியன் பேசுகையில், “இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு நாயகியாக யாரை தேர்வு செய்யலாம் என்று ஆலோசித்த போது, அன்யா சிங்கை சந்தீப் தான் பரிந்துரை செய்தார். இருப்பினும், ஆடிசன் வைத்துத்தான் அவரைத் தேர்வு செய்தோம். அவரும் நன்றாக நடித்திருக்கிறார்.” என்றார்.

Related News

5180

மக்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் உதயநிதி ஸ்டாலின்! - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து
Monday September-30 2024

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...

கோலாகலமாக நடைபெற்ற ‘பாரத் யாத்ரா’-வின் துவக்க விழா!
Monday September-30 2024

சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...

Recent Gallery