ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் நடிகர் கமல், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரனுடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘கடாராம் கொண்டான்’ படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்க, அக்ஷரா ஹாசனும், அபியும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
விழாவில் நடிகர்கள் விக்ரம், கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். மேலும், ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ-வாக நாராயணன் என்பவர் பதவி ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம், “ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாது தமிழ் படம் போடுவாங்க. அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல்சார் படங்களைத் தான். அவரைப் பார்த்து தான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்குப் பதினாறு வயதிலே படத்தை ரிமேக் பண்ணி நடிக்கணும் என்று ஆசை. ஆனால் அது என்னால் முடியாது. கமல் சார் நடிக்க வரும் லட்சக்கணக்கான பேர்களுக்கு இன்ஸ்பிரேசன். இந்தப்படத்தில் அபி இன்னொரு ஹீரோ. அபி அப்படி ஒரு நல்ல பையன். ரொம்ப இண்டர்ஸ்ரிங்கான கேரக்டர் பண்ணிஇருக்கார். நல்லா நடித்திருக்கிறார். அக்ஷரா ஹாசன் ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கிறார். படத்தை ரீ ரிங்காடிங்கோட பார்க்கும் போது சூப்பரா இருந்தது. இசை அமைப்பாளர் ஜிப்ரான் அருமையா வொர்க் பண்ணி இருக்கார். படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் சார் இந்தப்படத்தில் இன்னொரு நடிகர். அழகா நடிக்கச் சொல்லித் தருவார். எல்லாரும் நான் துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷாக இருப்பேன் என்று நினைக்கிறார்கள்.ஆனால் இநத்ப்படத்தில் ரொம்ப ஸ்டைலாக இருப்பேன். இந்தப்படம் நிச்சயம் எனக்குப் புதிய ரசிகர்களைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்.” என்றார்.
இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா பேசுகையில், “ராஜ்கமல் பிலிம்ல இரண்டு படம் மட்டும் அல்ல. நிறைய படங்களில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறேன். தூங்காவனம் படம் வரும்போது பத்திரிகையாளர்கள் எனக்கு நிறைய தைரியம் கொடுத்தார்கள். என் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் நல்லா வந்திடும் என்பது தெரியும். ஆனாலும் ஒரு பயம் இருந்தது. விக்ரம் சார் இங்கு எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் செட்டிலும் இருப்பார். காலையில் 9 மணிக்கு சூட்டிங் என்றால் சரியாக வந்துவிடுவார். அதிகநேரம் சூட்டிங் நடந்தால் கமல் சார் திட்டுவார். ஒரு தயாரிப்பாளரா அவர் சந்தோஷம் தான் படணும். ஆனால் அவர் அப்படியில்ல. இந்தப்படம் கமல் சார் எனக்காகவே தயாரித்தார். இந்தப்படத்தில் வேறு இசை அமைப்பாளரைப் போட்டிருந்தாலும் ஜிப்ரான் வந்து எனக்கு உதவி செய்திருப்பார். அக்ஷரா ஹாசன் அபி நடிக்க இருந்ததால் ஒரு பக்கா வொர்க்ஷாப் வைக்கலாம் என்று நினைத்தோம். அது சிறப்பாக இருந்தது. தயாரிப்பாளர் ரவீந்தரன் சார் ராஜ்கமல் பிலிம்ஸோட படம் பண்றோம் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லுவார். சியான் விக்ரம் சாரோட வொர்க் பண்ணும் போது என் நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள். அவருக்குப் பிடித்து விட்டால் நம்மை குழந்தை மாதிரிப் பார்த்துக்கொள்வார் என்றார்கள். சொன்னது போலவே என்னை குழந்தைப் போலவே பார்த்துக்கொண்டார். நிறைய முறை அவர் எனக்கு சாப்பாடு ஊட்டி கூட விட்டிருக்கிறார். ஏன் இந்தப்படத்தில் அக்ஷரா நடிக்கிறார் என்று பலரும் கேட்டார்கள். இதற்கான பதில் படம் பார்த்தால் தெரியும். கமல் சாருக்கு மறுபடியும் நன்றி. ஏன் என்றால் என் வீட்டில் என்னை நம்புகிறதை விட கமல் சார் என்னை நம்புகிறார்.” என்றார்.
தயாரிப்பாளர் ரவீந்தரன் பேசுகையில், “பத்மஸ்ரீ கமல் சாருக்குப் பெரிய நன்றி. ராஜ்கமல் இண்டர்நேஷனல் கம்பெனியோட படம் பண்றது எனக்குப் பெரிய பாக்கியமா இருக்கு. இந்தப்படத்தில் எல்லா அம்சமும் இருக்கிறது. அபி அக்ஷராஹாசன் நடிப்பு ரொம்ப சிறப்பா இருக்கு. இந்தப்படத்தில் விக்ரம் சார் செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார். படத்தில் ஹாலிவுட் ஹீரோ போல நடித்திருக்கிறார்.” என்றார்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...