கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனமும், ஆர்.ரவீந்திரனின் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கடராம் கொண்டான்’. கமலின் ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருக்கும் இப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். அக்ஷரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் இளைய மகன் அபி முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட கமல்ஹாசன் பேசும் போது, “விக்ரம் சீயான் விக்ரமாக இவ்வளவு காலம் ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டிருக்கிறேன்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், “ராஜ்கமல் நிறுவனம் துவங்கும் போது அக்ஷரா ஹாசன் பிறக்கவில்லை. அப்போதே இதுபோன்ற விழாக்களை நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறோம். முதலில் ராஜ்கமல் பிலிம்ஸ் என்று தான் பெயர் வைத்தேன், பிறகு என் குருநாதன் அனந்து சார் தான் இண்டர்நேஷனல் என்ற வார்த்தை சேர்த்தார். இந்த நிறுவனம், கமல்ஹாசனை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்கான உபர் வாகனம் அல்ல, பல வித்தியாசமான முயற்சிகளை செய்வதற்காகவும், நல்ல சினிமாக்களை எடுப்பதற்காகவும் தொடங்கப்பட்ட நிறுவனமாகும்.
விக்ரம் சீயான் விக்ரமாக இவ்வளவு காலமாகிவிட்டதே என்று வருத்தப்பட்டிருக்கிறேன், சேது படம் முன் கூட்டியே வந்திருக்க வேண்டும். கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் ரொம்பவே ஸ்டைலிஷாக இருக்கிறார். இது ஆங்கிலப் படம் போல இருக்கும் என்று அவர் கூறினார். அது உண்மை தான். அப்படி அவர் சொல்ல கான்பிடண்ட் வேண்டும் அது விக்ரமிடம் அதிகமாகவே இருக்கிறது. கூட நடிக்கும் நடிகர்களை நடிக்க வைத்து அழகு பார்க்க வேண்டும், அது ஒரு தன்னம்பிக்கை கொண்ட நடிகனால் மட்டுமே முடியும், அதை விக்ரம் செய்திருக்கிறார். அக்ஷரா ஹாசன் மற்றும் அபியை நடிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார்.
இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இந்த இடத்திற்கு வர ரொம்ப உழைத்திருக்கிறார். இயக்குநராவேன் என்ற எண்ணத்தில் அவர் என்னிடம் வரவில்லை. பல கட்டங்களை தாண்டி, படி படியாகவே இந்த இடத்தை அவர் பிடித்தார். நான் படத்தை பற்றி கவலைப்படவே இல்லை, காரணம் ராஜேஷ் எந்த பிரச்சினையையும் சமாளிப்பார், நான் உருவாக்கிய அத்தனை பிரச்சினைகளையும் சமாளித்தவர் என்பதால் இதை சொல்கிறேன். ஒரு அரசாங்கமே எங்களை துரத்தும் அளவுக்கு நாங்கள் படம் எடுப்போம், அதையெல்லாம் அவர் சமாளித்தவர்.
இந்த படத்தை தயாரித்ததில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஒரு தயாரிப்பாளராக எனக்கும், ரவீந்திரனுக்கும் வர வேண்டிய லாபம் வந்துவிடும். இப்படத்தின் மூலம் படத்தில் நடித்த கலைஞர்கள் மற்றும் இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்டவர்கள் அடுத்தக் கட்டத்திற்கு போக வேண்டும். அது ரசிகர்களால் தான் செய்ய முடியும். விக்ரம் எடுத்திருக்கும் இந்த வித்தியாசமான முயற்சிக்கு ரசிகர்கள் கைகொடுக்க வேண்டும். அப்போது தான் அவர் அடுத்த அடுத்த புதுமைகளை செய்ய முடியும். இந்த படத்திற்குப் பிறகு சியான் விக்ரம் கே.கே விக்ரம் என்று கூட அழைக்கப்படுவார். அந்த அளவுக்கு அவர் தனித்துவத்தை காட்டியிருக்கிறார்.
ராஜ்கமல் நிறுவனம் புதிய பார்ட்னர்களுடன் புத்துணர்ச்சியோடு மிகப்பெரிய படங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கான முதல் படியாக ‘கடராம் கொண்டான்’ அமைந்திருப்பது எனக்கு சந்தோஷம். இந்த சந்தோஷத்துடன் ‘கடாரம் கொண்டான்’ ஜூலை 19 ஆம் தேதி ரீலீஸ் ஆகிறது என்பதை அறிவிக்கிறேன்.” என்றார்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...