2019 ஆம் ஆண்டு வெளியான ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஓவியா, சமீபத்தில் ‘களவாணி 2’விலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். சினிமா வாய்ப்பு குறைந்து வாய்ப்புகள் குறைந்த நிலையில், பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமான ஓவியா, கையில் தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் இருக்கின்றன.
அவரது நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘களவாணி 2’ படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருப்பதால் அம்மணி குஷியாக இருக்கிறாராம்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா? என்று ஓவியாவிடம் கேட்டதற்கு, “சினிமா என்ன அரசியலில் ஈடுபடுவதற்கான பயிற்சி மையமா?” என்று கேள்வி எழுப்பியவர், “சினிமாவில் கொஞ்சம் பிரபலமாகிவிட்டால், அதை வைத்துக்கொண்டு அரசியலுக்கு வந்துவிடும் நிலைமை தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது.” என்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் பேசியவர், “தற்போது எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை, எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் அப்போது வருவேன். அப்போதும் தமிழக அரசியலில் தான் ஈடுபடுவேன். நான் தமிழ்நாட்டை விட்டு செல்ல மாட்டேன். எதாவது நல்லது செய்தால் அது தமிழ்நாட்டு மக்களுக்காக தான் செய்வேன். இங்கு தான் எனக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். அதே சமயம், ஓவியா ஆர்மியை தவறாக பயன்படுத்த மாட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...