பிக் பாஸ் நிகழ்ச்சியால் பெரிதும் பிரபலமாகியுள்ள ஓவியாவின் கால்ஷீட்டை வாங்கி படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறர்கள். ஏன், சில முன்னணி இயக்குநர்கள் கூட ஓவியா தங்களது படங்களில் கெளரவ வேடத்தில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள்.
இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள ஓவியா, எத்தனை கோடிகள் கொடுத்தாலும் பிக் பாஸ் வீட்டுக்கு திரும்ப செல்வதில்லை என்ற முடிவில் இருக்கிறாராம். அதே சமயம், தனது காதல் கவலையில் இருந்து மீண்டுள்ளவர் மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், ஓவியாவை ஒப்பந்தம் செய்துள்ள தங்கம் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்று, அவரை கெளதம் கார்த்திக்குக்கு ஜோடியாக போட்டு படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. அந்த படத்தின் தலைப்பு ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’.
படத்தின் தலைப்பே ஒரு மாதிரியாக இருக்கே, என்று யோசிக்க வேண்டாம். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள‘ஹரஹர மகாதேவகி’ படமும் அப்படிப்பட்ட பலான படமாகத்தான் உருவாகியிருக்கிறதாம். படக்குழுவினரே இப்படத்தை அடல்ட் ஒன்லி காமெடி படம் என்று தான் விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட தங்கம் சினிமாஸ், ஓவியாவை வைத்து ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற படத்தை தயாரிக்க இருப்பதாக தெரிவித்தனர்.
இப்படத்தில் கெளதம் கார்த்திக் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஓவியாவிடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறதாம். அவர் இப்படத்தில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளதாகவும், அதனால் அவர் நிச்சயம் நடிக்க சம்மதிப்பார் என்றும் தங்கம் சினிமாஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...