Latest News :

வசூல் மழையில் ‘களவாணி 2’! - விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி
Thursday July-11 2019

விமல், ஓவியா மற்றும் இயக்குநர் சற்குணம் கூட்டணியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘களவாணி 2’ கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், படம் என்னவோ வசூல் மழையில் நனைவதாக ரிப்போர்ட் வந்திருக்கிறது.

 

கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குநர் சற்குணம், நடிகர் விமல், நடிகை ஓவியா ஆகியோருக்கு அறிமுகப்படமாக அமைந்த ‘களவாணி’ அவர்களை தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டும் படமாக மாபெரும் வெற்றி பெற்றது. அப்படத்தை தொடர்ந்து இந்த மூவரும் தமிழ் சினிமாவில் பல வெற்றி, தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், இதே கூட்டணிக்கு முக்கியமான படமாக அமைந்த ‘களவாணி 2’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

 

உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவான இப்படம் ரிலீஸுக்கு முன்பாகவே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்ததால், படம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், படத்தில் காட்டப்பட்ட உள்ளாட்சி தேர்தல் கோல்மால்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

 

மேலும், படத்தில் வில்லன் கதாபாத்திரமும், அதில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் வித்தியாசமான முறையில் சித்தரிக்கப்பட்டிருந்ததும், அந்த வேடத்தில் துரை சுதாகரின் இயல்பான நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

 

கிரமாத்தில் அனைவரையும் உறவு முறை கூறி அழைத்துக் கொண்டு, உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் துரை சுதாகர், தன்னை தேர்தலில் நிற்க சொல்லி கேட்கும் ஊர் மக்களை வரவேறு உபசரிப்பது, தனது மகள் மஞ்சல் நீராட்டு விழாவில், ஊர் மக்களிடம் கண் கலங்க பேசுவது, என்று கிடைத்த வாய்ப்பில் தனது திறமையை நிரூபித்து மக்கள் மனதில் இடம் பிடித்ததோடு, தமிழ் சினிமா இயக்குநர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.

 

Vimal and Durai Sudhakar

 

இப்படி, மண் சார்ந்த படமாகவும், கிராமத்து இயல்பு மனிதர்களின் வாழ்க்கை பதிவாகவும், கிராமத்தில் நடக்கும் தேர்தல் கொண்டாட்டங்கள் மற்றும் தில்லுமுல்லுவை விவரிக்கும் படமாகவும் அமைந்த ‘களவாணி 2’ திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறது. படத்தை வெளியிட்ட நிறுவனமும், வாங்கிய விநியோகஸ்தர்களும் சந்தோஷமடைந்திருக்கிறார்கள்.

 

அப்படினா, நிச்சயம் ‘களவாணி 3’வை எதிர்ப்பார்க்கலாம் போலிருக்கே.

Related News

5242

மக்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் உதயநிதி ஸ்டாலின்! - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து
Monday September-30 2024

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...

கோலாகலமாக நடைபெற்ற ‘பாரத் யாத்ரா’-வின் துவக்க விழா!
Monday September-30 2024

சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...

Recent Gallery