Latest News :

காமெடி நடிகருக்கு ஜோடியாகும் அஞ்சலி!
Thursday July-11 2019

பிஸியான நடிகையாக இருக்கும் போது குடும்ப பிரச்சினை காரணமாக கோலிவுட்டை விட்டு எஸ்கேப் ஆன நடிகை அஞ்சலி, சில வருடங்கள் ஆந்திராவில் தலைமறைவாக இருந்துவிட்டு தற்போது மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பியிருக்கிறார். 

 

தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரியாகியிருக்கும் அஞ்சலியின் சமீபத்திய படங்கள் தொடர் தோல்வியடைந்து வருவதால் அம்மணியை ஹீரோக்கள் கண்டுகொள்வதில்லை. இதனால், சின்ன படம் பெரிய படம், பெரிய ஹீரோ சின்ன ஹீரோ என்ற பாகுபாடு பார்க்காமல் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருக்கும் அஞ்சலி, தற்போது காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

 

ஜெய், அஞ்சலி நடித்த ‘பலூன்’ என்ற தோல்விப் படத்தை இயக்கிய கே.எஸ்.சினிஷ், ‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி காமெடி படத்தில் அஞ்சலி ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி புகழ் ராமர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார். இவர்கள் இருவரும் அஞ்சலியை ஒரு தலையாக காதலிக்கும் ரோட்சைட் ரோமியாக்கள் வேடத்தில் நடிக்கிறார்கள்.

 

Yogi Babu

 

கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சினிஷ் கூறுகையில், “இந்த படத்தில் ஈர்க்கக்கூடிய விதிவிலக்கான அம்சம், இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் வடிவமைத்த அடிப்படை யோசனை. பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் எப்போதும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் அல்லது சமூக படங்களாக இருப்பது தான் வழக்கம். நகைச்சுவை படமாக முயற்சித்தாலும் கூட, முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதில்லை. சுவாரஸ்யமாக, இந்த கதை தன்னை ஒரு முழுமையான ‘பேண்டஸி காமெடி’யாக மாற்றிக் கொண்டது, மேலும் கிருஷ்ணன் ஸ்கிரிப்டை விவரித்த விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனெனில் நான் நிறைய நகைச்சுவை தருணங்களில் மெய்மறந்து சிரித்தேன்.

 

நாயகியின் கதாபாத்திரம் சில குணாதிசயங்களுடன்  வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை சின்ன சின்ன வெளிப்படுத்தல்களின் மூலம் உடனடியாக கவனத்தை ஈர்க்கும், அவை நவைச்சுவையை வரவழைக்கும். நாயகிகளின் பட்டியலை பார்ப்பதற்கு முன்பே, நடிகை அஞ்சலி அத்தகைய தனித்துவமான பண்புகளை பெற்றவர் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.” என்றார்.

 

இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறுகையில், “அஞ்சலி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியானவர் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா? என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, நான் அவருக்கு கதையை விவரிக்கையில், அவர் ஸ்கிரிப்டை ரசிக்க ஆரம்பித்தார். அத்தகைய சைகை என் நம்பிக்கையை அதிகரித்தது. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அவர் திடீரென உறுதிப்படுத்தினார். சமீப காலங்களில் யோகிபாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவரே முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஆனாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், முழு படத்திலும் தோன்றுவார். அதே போல, அஞ்சலி மற்றும் யோகி பாபு ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ராமரும் முழு படத்தில் இருப்பார்.” என்றார். 

Related News

5243

மக்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் உதயநிதி ஸ்டாலின்! - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து
Monday September-30 2024

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...

கோலாகலமாக நடைபெற்ற ‘பாரத் யாத்ரா’-வின் துவக்க விழா!
Monday September-30 2024

சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...

Recent Gallery