Latest News :

கலக்கல் ஸ்டார் பட்டத்தை பெற்ற ‘சாதனை பயணம்’ ஹீரோ பரமேஸ்வரர்
Wednesday July-17 2019

நடிகர்களின் நடிப்பு திறமையையும், மக்களிடம் அவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பையும் பொருத்தே சினிமாவில் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், தல அஜித் என்று பல முன்னணி நட்சத்திரங்களின் பெயர்களுக்கு முன்னால் இப்படி தான் பட்டங்கள் சேர்ந்தாலும், தற்போது கோடம்பாக்கத்தில் உதிக்கும் சில திடீர் ஸ்டார்கள் வரும்போதே, பட்டத்துடனேயே வருகிறார்கள். பவர்ஸ் ஸ்டார், பப்ளிக் ஸ்டார், வின் ஸ்டார் என்று மாதம் ஒரு ஸ்டார்கள் கோடம்ப்பாக்கத்தில் அவதரித்தாலும், இவர்களில் திறமை இருப்பவர்கள் நிரந்தர ஸ்டாராக மக்கள் மனதில் நின்றுவிடுகிறார்கள்.

 

அந்த வரிசையில், புதிதாக தமிழ் சினிமாவில் அவதரித்திருப்பவர் ‘கலக்கல் ஸ்டார்’ பரமேஸ்வரர். சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தினாலும், ஆசையினாலும் சுமார் 15 ஆண்டுகளாக சினிமாவில் பல்வேறு துறைகளில் பயணித்துக் கொண்டிருப்பவர், பல திரைப்படங்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை செய்துக் கொடுத்து வந்திருக்கிறார். அப்படி பலருக்கு உதவி செய்தவர், சொந்தமாக படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்து அதற்கான கதை தேர்வில் ஈடுபட்டிருக்கிறார்.

 

தயாரிப்பதற்காக கதை கேட்ட பரமேஸ்வரர், தனது கதைக்கு பொருத்தமாக இருந்ததால், அவரே ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று இயக்குநர் மாதேஷ்வரா விருப்பம் தெரிவிக்க, அவரை தொடர்ந்து பலரும் அதையே முன்மொழிய பரமேஸ்வரர் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டார். 

 

ஹீரோ என்றால், அடிதடி, டூயட் என்று இல்லாமல், கதையின் நாயகனாக பரமேஸ்வரர் நடித்திருக்கும் ‘சாதனை பயணம்’ அனைத்து மக்களுக்கும் பிடித்த படமாக செண்டிமெண்ட், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்தும் கலந்த குடும்பத்தோடு பார்க்க கூடிய கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.

 

மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் எதாவது ஒரு சாதனையை செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள், என்பதை உணர்த்துவது தான் இப்படத்தின் கரு. சாதாரண விவசாயியான பரமேஸ்வரர், தனது உழைப்பால் உயர்ந்து தனது மகள்களை நல்லபடியாக வளர்த்து, அவர்களுக்கு திருமணம் செய்துக் கொடுத்த பிறகு, மகள்களின் சுயநலத்தால் அவர் புறக்கணிக்கப்படுகிறார். இதற்காக துவண்டு போகாமல், மீண்டும் ஆரம்பத்தில் இருந்து வரும் பரமேஸ்வரர், தனது உழைப்பால் எப்படி உயர்ந்து சாதிக்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை.

 

படம் கமர்ஷியலாக இருந்தாலும், திருமணம் வரை பெற்றோர்களின் தயவை எதிர்ப்பார்க்கும் பிள்ளைகள் அதன் பிறகு அவர்களை எப்படி உதாசிணப்படுத்துகிறார்கள், அப்படி அவர்கள் செய்வதால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்ற மெசஜை இயக்குநர் மாதேஷ்வரா அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

விவசாயி, இரண்டு மகள்களின் தந்தை, ஊருக்கு கொடுத்து உதவி செய்யும் வள்ளல், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர், என்று நான்கு கெட்டப்புகளில் நடித்திருக்கும் பரமேஸ்வரரின் மெனக்கெடலையும், அவர் இந்த கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய நடிப்பையும், பின்னணி இசையமைக்கும் போது பார்த்து வியந்த இசையமைப்பாளர் தஷி, அவருக்கு ’கலக்கல் ஸ்டார்’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளார். பட்டம் என்றதுமே பரமேஸ்வரர் பதறியபடி வேண்டாம், என்று மறுத்தாலும், ‘சாதனை பயணம்’ படத்தின் கதைக்கு ஏற்ப கச்சிதமாக பொருந்தியதோடு, அந்த கதாபாத்திரம் மக்கள் மனதில் நிற்கும்படி பிரமாதமாக பரமேஸ்வரர் நடித்திருந்ததால், இந்த படமும், பரமேஸ்வரரும் நிச்சயம் மக்கள் மனதில் இடம் பிடிப்பார், என்று கூறிய இசையமைப்பாளர் தஷி, பட்டத்தை நிச்சயம் பயன்படுத்த வேண்டும், என்று கேட்டுக்கொண்டாராம்.

 

கலக்கல் ஸ்டார் என்ற பட்டத்துடன் வரும் போது பலர் விமர்சிப்பார்கள், அப்படி விமர்சிப்பவர்களே என்னை கலக்கல் ஸ்டார் என்று அழைக்கும் அளவுக்கு ஒரு நடிகராக சினிமாவில் நிச்சயம் சாதிப்பேன், என்று நம்பிக்கையோடு பரமேஸ்வரர் கூறுகிறார்.

 

தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும் ‘சாதனை பயணம்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளது. இசையரசர் தஷி இசையமைப்பில் இரண்டு டைடில் பாடல்களையும் சேர்த்து மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. இந்த 7 பாடல்களும் திரும்ப திரும்ப கேட்கும்படியான பாடல்களாக உள்ளது.

 

கவிஞர் முத்துலிங்கம் வரிகளில், ஆதர்ஷ் மற்றும் ஸ்ரீலஷ்மி ஆகியோரது குரலில் உருவான “எனக்கென இருப்பது ஒரு சொந்தம்...” என்ற பாடலும், கவிஞர் சுதந்திர தாஸ் வரிகளில், சஜீஷ், சுமேகா சந்திரன் ஆகியோரது குரலில் உருவான “வெட்கத்தவிட்டா வேதனை தீரும்...”, கவிஞர் முத்துலிங்கம் வரிகளில், ஆதர்ஷ் குரலில் உருவான “பெத்த சொந்தம்...” என்று தொடங்கும் பாடல், கவிஞர் சொ.சிவக்குமார் பிள்ளை வரிகளில், பாப் பூர்ணிமா, சார்லஸ் ஆகியோரது குரலில் “அச்சப்பட்ட, அச்சப்பட்ட பெண்ணே...”, கவிஞர் சி.வீரமணி வரிகளில், கானா உலகநாதன், வினய்தா ஆகியோரது குரலில் உருவான “தாபா தாபாதாபாதான்...”, கவிஞர் கலைவேந்தன் வரிகளில், சங்கர் தாஸ் குரலில் “சொல்லப்போறேன், சொல்லப்போறேன்...”, கவிஞர் அமிர்தன் வரிகளில், ரிஷப் குரலில் உருவான “வானம் வசப்படும்...” ஆகிய இந்த 7 பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஹிட் பாடல்களாகியுள்ளது.

 

Sathanai Payanam

 

விஜியாலயா பிலிம்ஸ் எஸ்.சந்திரன் பெருமையுடன் வழங்கும், கலக்கல் ஸ்டார் பரமேஸ்வரர் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அழகு, சஞ்சு, ஹரிப்ரியா, பேபி தன்யா, வான்யா, கவிஞர் கருப்புராஜா, லிபாலி, முகேஷ், எஸ்.கே.எம்.பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

மாதேஷ்வரா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு மகேஷ் சுப்ரமண்யம், ஆரி இராஜன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். அக்‌ஷய் ஆனந்த் நடனம் அமைக்க, கே.பி.செல்வராஜ் எடிட்டிங் செய்திருக்கிறார். சாய் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். மக்கள் தொடர்பாளர் பணியை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.

Related News

5273

மக்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் உதயநிதி ஸ்டாலின்! - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து
Monday September-30 2024

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...

கோலாகலமாக நடைபெற்ற ‘பாரத் யாத்ரா’-வின் துவக்க விழா!
Monday September-30 2024

சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...

Recent Gallery