Latest News :

'சூப்பர் டூப்பர்' படத்தை வாங்கி வெளியிடுவேன் - தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன்
Saturday July-20 2019

ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா , இந்துஜா  நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூப்பர் டூப்பர்'. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

 

விழாவில் இயக்குநர் ஏகே, நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா, படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதி ரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவாகரா  தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் கலந்து கொண்டார்.

 

விழாவில் இயக்குநர் அருண் கார்த்திக் என்கிற  ஏ.கே. பேசும்போது, "இது என் 15 ஆண்டு காலக் கனவு. நான் இங்கே சிரமப்பட்டு வந்தேன் என்று சொல்வதைவிட பலரைச் சிரமப்படுத்தி -கஷ்டப்படுத்தி வந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.  இதை ஒரு சாதாரண காமெடி படமாகத்தான்  ஆரம்பித்தோம் .ஆனால் அப்படியே இருக்கக்கூடாது என்று யோசித்தோம்.பலவித வண்ணங்களையும் வாசனைகளையும் கலந்து இதை வேறு வகையான படமாக உருவாக்கி இருக்கிறோம். இதில் பலரது உழைப்பு இருக்கிறது .ஒரு புதிய படக்குழு செப்துள்ள புதிய முயற்சி இது .ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும் .பொதுவாகக் கண்டிப்பவர்களை யாருக்கும் பிடிக்காது அப்பாவாக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி. ஆனால் ஊடகங்கள்தான் கண்டிக்கிறபோதும்  நண்பர்களாக இருப்பவர்கள் . இப்படத்திற்கு அவர்களின் ஆதரவு வேண்டும்." என்றார் .

 

ஒளிப்பதிவாளர் தளபதி ரத்னம் பேசும்போது, "இந்த மேடையில் நான் நிற்பதற்கு பல மனிதர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். இப் படத்தின் போது பல மனிதர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். ஒன்பது  ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாய்ப்பு வந்துள்ளது. இதில் பலரும் உழைத்திருக்கிறார்கள்." என்றார்.

 

இசையமைப்பாளர் திவாகரா தியாகராஜா பேசும்போது, "ஐந்தாண்டு பயணத்தில் வந்த படம் இது. நான் ஐடியில் வேலை பார்த்து வந்தேன். வாய்ப்புக்கான போராட்டத்தில் முடியாமல் மீண்டும் திரும்பிச்சென்று சென்று விடலாம் என்று இருந்தவன் .என்னை ஏகே தான் பிடித்து இழுத்து  மீண்டும் அழைத்து வந்தார்.   குறும்பட முயற்சிகள் என்று செய்தோம். அது இந்த படம் வரை வந்து இருக்கிறது." என்றார்.

 

நாயகன் துருவா பேசும்போது, "இயக்குநர் ஏ .கே  ஒன்மேன் ஷோ வாக பலவற்றை படத்தில் செய்திருக்கிறார். 90 களில் சிம்ரன் இருந்த மாதிரி கவர்ச்சியாகவும் இருந்து நடிப்பையும் கொடுத்திருக்கிறார் இந்துஜா. இதில் எங்களுடன் இணைந்து நடித்திருக்கும் ஷாரா ,ஆதித்யா நல்ல பெயர் பெறுவார்கள். ஒரு படத்திற்குக் கதை தான் முக்கியம் என்றாலும் விநியோகம் மிக முக்கியம் என்று இப்போது மாறியிருக்கிறது. இன்று சின்ன படம் பெரிய படம் என்றில்லை. வெற்றிப்படம் தோல்விப்படம் என்று மட்டுமே பேசப்படுகிறது. இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள்." என்றார்.

 

தயாரிப்பாளர் சதீஷ்குமார் பேசும்போது, "இப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லரைப் பார்க்கும் போது யார் ஒளிப்பதிவாளர் ? யார் இசையமைப்பாளர்? என்று தேடிப் பிடித்துப் பாராட்டத் தோன்றியது. இன்று சினிமா எடுக்கும் போது அதன் வியாபார சாத்தியங்களை வெளியீட்டு விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு உதவ நானும் தயார். அனுபவமுள்ள மூத்த தயாரிப்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள்." என்றார்.

 

நாயகி இந்துஜா பேசும்போது, "இந்தப் படக்குழு குறும்பட உலகத்தில் இருந்து வந்தாலும் தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். குறும்படக் கலைஞர்கள் இருப்பதைக் கொண்டு சிறப்பாக செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அப்படி இதிலும் செய்திருக்கிறார்கள்." என்றார்.

 

லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசும்போது, "இந்த விழாவிற்கு என்னை நாயகன் துருவா ,இயக்குநர் ஏ கே , இசையமைப்பாளர் திவாகர் வந்துஅழைத்தார்கள். நானும் குறும்பட உலகத்திலிருந்து  பெரும் படத்துக்கு பல கனவோடுவந்தவன். அப்போது எனக்குப் பழைய நினைவுகள் வந்தன.  நிகழ்ச்சிக்கு இங்கே வந்துள்ள இந்த டி.சிவா சார் அன்று என்னை ஊக்கப்படுத்தியவர். அவர் இங்கிருக்கிறார். எனக்குத் தொழில்நுட்ப ரீதியில் ஆலோசனைகள் வழங்கிய ஜே எஸ்கே சதீஷ் சார் இங்கே இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

 

இந்தப் படக்குழுவினரைப் பார்க்கும்போது ஒரு நம்பிக்கை வருகிறது. டிரைலரைப் பார்க்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி வருகிறது. படத்திலும் அதில் இருக்கும் என நம்புகிறேன். படத்தை எனக்குப் பிடித்து இருந்தால் நிச்சயமாக நான் வாங்கி வெளியிடுவேன்.

 

நான் பெரும்பாலும் புதுவித படக்குழுவுடன் தான் பணியாற்றுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கே உள்ள சினிமா வெளியீடு மற்றும் வியாபார விஷயங்கள் எனக்குத் தெரியாமல் இருந்தது. அது புரிவதற்கு ஏழு வருடங்களானது. நேற்று வெளியான 'கூர்கா' படத்தை நான் முதன் முதலில் வெளியிட்டுள்ளேன். பெரிய விலை கொடுத்துவிட்டதாகவும் பலரும் சொன்னார்கள். கதையை மட்டும் பார்த்தேன், படமும்  வெற்றிகரமாக ஓடுகிறது.

 

ஒரு படத்தை உருவாக்க நினைக்கும் போது கிடைக்கும் தோல்வியில் இருந்து எழுந்து போராடி கிடைக்கும் வெற்றி அளவில் பெரியதாக இருக்கும்." என்றார்.

Related News

5286

மக்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் உதயநிதி ஸ்டாலின்! - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து
Monday September-30 2024

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...

கோலாகலமாக நடைபெற்ற ‘பாரத் யாத்ரா’-வின் துவக்க விழா!
Monday September-30 2024

சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...

Recent Gallery