அபுண்டு ஸ்டூடியோஸ் (பி) லிட் (ABBUNDU STUDIOS-P-LTD) புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் 'எங்கே அந்த வான்'. ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புதிய காதல் உதயமாகும், அறிமுகமாகும், நம் மனசுக்கு இதமாக சுகமளிக்கும். அப்படி ஓர் காதல் படைப்புதான் இப்படம். காதலை தேடிய ஒரு பெண்ணின் கவிதையாய் ஒரு பயணம் ‘எங்கே அந்த வான்’.
கும்பகோணம் திருவையாறு ஊரில் பிறந்து சாதாரண பள்ளியில் படித்து, சென்னை ஐஐடி போன்ற படிப்பில் சேர்ந்து படிக்கிறார் கமலி. அவளின் வாழ்க்கை சார்ந்த பயணம், அதில் ஒரு அசாத்தியமான காதல் பயணிக்கிறது. இதில் கமலியாக ஆனந்தி நடிக்கிறார். 'பரியேறும் பெருமாள்' படத்தில் அனைவராலும் பாராட்டுப் பெற்ற ஆனந்திக்கு இப்படம் மேலும் ஒரு மகுடம் சேர்க்கும். இவரது ஜோடியாக ரோஹித் சரப் அறிமுகமாகிறார். இவர் ஹிந்தியில் பரபரப்பாக ஓடிய ஹிச்கி (HICHKI) படத்தில் நடித்துள்ளார். ராணி முகர்ஜி டீச்சராகவும் ரோஹித் சரப் மாணவனாகவும் நடித்திருந்தனர். மேலும் ஷாருக்கான் நடித்த 'டியர் சிந்தகி' படத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிப்பதற்காக தமிழ் சிறிது கற்றுக் கொண்டு நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரதாப் போத்தன், அழகம்பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு கும்பகோணம், கோபிசெட்டிபாளையம்,சென்னை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் உச்சக்கட்ட காட்சி டெல்லியில் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.
லிங்குசாமி, உதயசங்கர் போன்ற பிரபல டைரக்டர்களிடம் பணிபுரிந்த ராஜசேகர் துரைசாமி முதன் முறையாக தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
குறும்படம் மற்றும் விளம்பர படங்களுக்கு இசை அமைத்து வரும் தீனதயாளன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...