இந்தி சேனல்களில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் சக்கை போடு போட்டாலும், தற்போது பார்வையாளர்களை இழந்து, டி.ஆர்.பி-யிலும் பெரிய சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் ஜூலி, பிறகு ஓவியா என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக்கிய இந்த இரண்டு பெண்களும் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவுடன் நிகழ்ச்சி டல்லடிக்க தொடங்கியது. பிறகு ஓவியா இல்லாத குறையை போக்க வேண்டும் என்று, ஆர்த்தி, ஜூலி ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வரவைக்கப்பட்டாலும், நிகழ்ச்சி சூடு பிடிக்காமல் மந்தமாகவே போய்க்கொண்டிருக்கிறது.
இதனால், பதற்றம் அடைந்த விஜய் டிவி ஓவியாவை எப்படியாவது மீண்டும் வீட்டுக்குள் அடைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியது. மேலும், ஓவியாவுக்கு ஒரு எபிசோட்டுக்கு அதாவது வாரத்திற்கு கொடுக்கப்பட்டு வந்த ரூ.5 லட்சத்தை தினமும், அதாவது ஒரு நாளுக்கு 5 லட்சம் ரூபாய் தருவதாகவும் கூறியதாம். ஆனால், எதற்கும் மசியாத ஓவியா, இனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை என்பதில் ரொம்ப உறுதியாக உள்ளாராம்.
ஓவியாவை தவிர்த்து வேறு எந்த எந்த விஷயங்களை வைத்து நிகழ்ச்சியை மீண்டும் பரபரப்பாக்களாம் என்று பிக் பாஸ் குழு கூடி கூடி பேசினாலும் நிகழ்ச்சி மட்டும் பழைய நிலைக்கு திரும்பாமல் நொட்டியடிக்கிறதாம். இப்படியே நிலை தொடர்ந்தால், முதல் எப்பிசோடு பிக் பாஸ் நிகழ்ச்சி மூட்டைக்கட்டப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால், எப்படியாவது ஓவியாவை மீண்டும் நிகழ்ச்சி அழைத்து வந்துவிட வேண்டும் என்று, நிகழ்ச்சி குழுவினர் கஜினி போல தொடர்ந்து ஓவியா மீது படையெடுத்து வருகிறார்களாம்.
பார்ப்போம் ஓவியா அவர்களுக்கு கருணை காட்டுவாரா என்று!
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...