Latest News :

’ஹீரோ’ படத்தின் கதாபாத்திரங்கள் மிரமிக்க வைக்கும்! - தயாரிப்பாளர் நம்பிக்கை
Tuesday July-30 2019

2019ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நம்பிக்கைக்குரிய படங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ள சிவகார்த்திகேயனின் "ஹீரோ", ரசிகர் கூட்டத்தின் கவனத்தை தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எந்த ஒரு போஸ்டர் அல்லது காட்சி விளம்பரங்களை கூட வெளியிடாமலேயே ஒரு படம் தன் மீதான வெளிச்சத்தை அப்படியே தக்க வைப்பது மிகவும் கடினமான ஒரு பணியாகும். 

 

படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் கூறும்போது, "ஆம், போஸ்டர்களும் காட்சி விளம்பரங்களும் ஒரு திரைப்படத்தை அதிக அளவில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன என்பது உண்மைதான், ஆனால் 'ஹீரோ' வைப் பொருத்தவரை, ஆரம்ப கட்டத்திலிருந்தே படக்குழுவே படத்தை கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி வருகிறது. சிவகார்த்திகேயன் ஒரு பெரிய பிராண்ட், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரது திரைப்படங்களை தவறாமல் பார்க்கும் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை தக்கவைத்து கொண்டிருக்கிறார். ஹீரோ எனக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். ஏனெனில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமைகளுடன் இந்த படத்தில் இணைந்திருக்கிறேன். ஆக்ஷன் கிங் அர்ஜுன் சார் மற்றும் அபய் தியோல் போன்ற பெரிய நடிகர்களை கொண்டிருப்பது ஒரு பெரிய வரம். ஒரு திரைப்படத்தை ஆடம்பரமாக தயாரிக்க முடியும், ஆனால் அத்தகைய நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவைப் பெறுவது தான் மிகப்பெரிய விஷயம். நடிகர்கள் ஒரு கண்கவர் அம்சமாக தெரிந்தாலும், தொழில்நுட்பக் குழுவினர் இந்த படத்தின் மற்றொரு தூணாகும். இரும்புத்திரையில் பி.எஸ்.மித்ரனின் இணையற்ற கதை சொல்லல் மற்றும் திரைப்படத் தயாரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. 

 

மித்ரனிடம் கதை கேட்கும் முன்பு, அவர் இரும்புத்திரை போன்ற ஒரு கதையுடன் தான் வரக்கூடும் என்று நான் கருதினேன். ஆனால் எனக்கு ஆச்சரியமாக ‘ஹீரோ’ முற்றிலும் மாறுபட்ட மற்றும் புதுமையான கதையாக இருந்தது. அவர் குறிப்பிட்டுள்ள கதாபாத்திரங்கள் பிரமிக்க வைக்கும், அந்த கதாபாத்திரங்களில் மிகச்சிறந்த நடிகர்கள் நடிப்பது எனக்கு படத்தை இப்போதே பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே தென்னிந்திய சினிமாவில் ஒரு பெரிய அந்தஸ்தைப் பெற்றுள்ளார், மேலும் இங்கே ’ஹீரோ’ வில் நல்ல பெயரை பெறவும் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.

 

மிகச்சிறந்த நடிகர்கள் பட்டாளம், தொழில்நுட்ப கலைஞர்களையும், தனித்துவமான கதையையும் கொண்டு மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை நினைத்த மாதிரி உருவாக்க சரியான காலம் தேவை. இந்த அம்சத்தில் சிறந்ததை கொண்டு வருவதில் ஒரு குழுவாக நாங்கள் எங்கள் முயற்சிகளை எடுத்து உழைத்து வருகிறோம். தனிப்பட்ட முறையில், ‘சரியான நேரத்தில் சரியான விஷயம் நடக்க வேண்டும்’ என்ற கோட்பாட்டை நான் கடுமையாக நம்புகிறேன். எனவே ‘ஹீரோ’ நீண்ட கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் ஆண்டு இறுதி விடுமுறைகளுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்று உணர்ந்தேன்.” என்றார்.

 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். இப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Related News

5357

மக்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் உதயநிதி ஸ்டாலின்! - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து
Monday September-30 2024

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...

கோலாகலமாக நடைபெற்ற ‘பாரத் யாத்ரா’-வின் துவக்க விழா!
Monday September-30 2024

சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...

Recent Gallery