Latest News :

தமிழ் சினிமாவில் அதிகரித்த கதை திருட்டு! - காரணம் கார்ப்பரேட் நிறுவனங்கள்
Wednesday July-31 2019

தமிழ் சினிமாவில் கதை திருட்டு விவகாரம் பல ஆண்டுகளாக இருந்தாலும், தனது கதையை பறிகொடுத்த உதவி இயக்குநருக்கு சரியான நியாயம் கிடைத்தது என்னவோ, விஜயின் ‘சர்கார்’ பட விவகாரத்தில் தான். எழுத்தாளர் சங்கம் சார்பில் கே.பாக்யராஜ் எடுத்த அதிரடி நடவடிக்கையால், கதை திருடுபவர்கள் சற்று கதிலங்கினாலும், திருட்டு சம்பவம் மட்டும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.

 

தற்போது கூட, பாத்திபனிடம் உதவி இயக்குநராக இருந்தவருடைய கதை திருடப்பட்டு, திரைப்படமாக உருவாகி இம்மாதம் வெளியாக உள்ளது. அப்படத்திற்கு எதிராகவும் கதையாசிரியர் சங்கம் சாட்டை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், உதவி இயக்குநர்களின் கதை திருடப்படுவதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் காரணம், என்று இயக்குநர் ஒருவர் தனது திரைப்படம் மூலம் கூற வருகிறார்.

 

ஆம், ’படைப்பாளன்’ என்ற தலைப்பில் உருவாகும் திரைப்படம், சினிமாவில் நடக்கும் கதை திருட்டு பற்றியும், கதையை பறிக்கொடுத்த உதவி இயக்குநர்களின் வலியை பற்றியும் பேச வருகிறது.

 

எல்.எஸ் தியான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நடச்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன் பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் எல்.எஸ்.பிரபுராஜா, ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இவர் இயக்குநர் தருண்கோபியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

 

மனோபாலா, இயக்குநர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் -விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு வேல்முருகன் ஒளிப்பதிவு செய்ய, கிருபாகரன் இசையமைக்கிறார். ஸ்ரீமன் பாலாஜி கலையை நிர்மாணிக்க, எஸ்.பி.அகமது எடிட்டிங் செய்கிறார். மணவை புவன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

 

Padaippaalan

 

படம் பற்றி கூறிய இயக்குநரும், நாயகனுமான எல்.எஸ்.பிரபுராஜா, “முழுக்க முழுக்க சினிமாவில் இயக்குநராக துடிக்கும் ஒரு உதவி இயக்குநரின் கதை இது. முன்பெல்லாம் படத்தயாரிப்பாளர்கள் எளிமையான இடத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தார்கள். இப்போது பெரும்பாலான படங்களை தயாரிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். கதை கேட்பது கிடையாது, பவுண்டட் ஸ்கிரிப்ட் கொடுங்கள் படித்து விட்டு சொல்கிறோம் என்று கதை வாங்கி கிடப்பில் போட்டு அவர்களை அழைக்கழிக்கிறார்கள். பிறகு சில நாட்களில் ஒரு பிரபலமான இயக்குனர்களை வைத்து அந்த கதையை படமாக்கி வெளியிடுகிறார்கள்.

 

அந்த உதவி இயக்குநரின் உழைப்பு, வலிகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அப்படி கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றிற்கு கதை சொல்லப் போகும் ஒரு உதவி இயக்குநரின் சொந்தக் கதைப் பற்றியும் அவன் சொன்ன கதைப்பற்றியும் தான் இந்த படம். கடவுள் ஒருவனை தண்டிக்க நினைத்தால் அவனை உதவி இயக்குநராக படைத்து விடுவார் என்று சொல்வார்கள். உதவி இயக்குநர்களின் வாழ்வு அத்தகைய துயரம் நிறைந்தது. உதவி இயக்குநராக இருப்பவனுக்கு பெண் கிடைப்பதில் இருந்து வீடு கிடைப்பது வரை பெரும் சங்கடம் தான். மக்களிடையே சினிமா இயக்குனர் என்றால் ஒரு விதமான மோசமாகவே கருதுகிறார்கள். ஆனால் மக்களை தங்கள்  படங்களின் மூலம் மகிழ்விப்பவனே ஒரு படைப்பாளன் தான். அப்படியான வலி மிகுந்த உதவி இயக்குநரின்  வலிகளையும் வழிகளையும்  இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்ட உள்ளது.” என்றார்.

Related News

5367

16 மொழிகளில் உருவாகும் விமலின் ‘பெல்லடோனா!
Sunday November-17 2024

யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...

ரூ.10 கோடிக்காக தனுஷ் மீது பரபரப்பு குற்றம் சாட்டிய நயன்தாரா!
Saturday November-16 2024

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...

”பயம் கலந்த சந்தோஷத்துடன் தான் சம்மதித்தேன்” - மனம் திறந்த நடிகர் அதர்வா
Saturday November-16 2024

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...

Recent Gallery