Latest News :

இயற்கை விவசாயத்திற்காக விழா நடத்திய இயக்குநர்!
Saturday August-03 2019

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி பேசிய ‘குத்தூசி’ என்ற திரைப்படத்தை இயக்கிய சிவசக்தி, இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதை மையமாக வைத்து படம் எடுத்தவர், தனது சொந்த வயலிலும் இயற்கை விவசாயத்தை பாரம்பரிய நெல்லில் செய்தும் வருகிறார்.

 

இந்த நிலையில் இயக்குநர் சிவசக்தி, தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தில் இயற்கை விவசாயம் அறிமுக விழாவை நடத்தியுள்ளார்.

 

விழாவில் நம்மாழ்வார் திருவுருவப்படத்தை திறந்து வைத்து, இயற்கை விவசாயம் ஏன்?, என்பதை விவரித்ததோடு, அதன் சிறப்பு பற்றி சான்றோர்கள் உரையாற்றினார்கள். மேலும், விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் காட்டுயாணம் காலாநமக், மாப்பிள்ளை சம்பா தந்தும், பனை விதை, விதை பந்து மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மரகன்று வழங்கியுள்ளார்கள். 465 வகையான பாரம்பரிய நெல் கண்காட்சியும் இவ்விழாவில் நடைபெற்றது.

 

விழாவில் பாரம்பரிய அரிசியான காட்டுயாணம் கஞ்சி, மாப்பிள்ளை சம்பா சாதம் உணவாக வழங்கப்பட்டது. 

 

உழவர்களுக்கு ஒரே கருத்தாக, வயலில் உங்களுக்காண உணவை பாரம்பரிய நெல்லில் இயற்கை விவசாயம் செய்யுங்கள். விதைநெல்லை பாதுகாத்தும், இயற்கையை போற்றியும் வாழ்வோம், என்று கூறினார்கள்.

 

Natural Forming Festival

 

குத்தூசி இயற்கை போற்றும் நண்பர்கள், பசுமை சிகரம் அறக்கட்டளை மற்று எழில் இயற்கை வேளாண் பண்ணை ஆகிய அமைப்புகள் சேர்ந்து இவ்விழாவை நடத்தினார்கள்.

Related News

5384

மக்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் உதயநிதி ஸ்டாலின்! - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து
Monday September-30 2024

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...

கோலாகலமாக நடைபெற்ற ‘பாரத் யாத்ரா’-வின் துவக்க விழா!
Monday September-30 2024

சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...

Recent Gallery