ஐடி துறையில் இருந்து சினிமாத் துறைக்கு தாவிய பல இளைஞர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில், ‘யாரோ’ என்ற படத்தின் மூலம் ஐடி துறையை சேர்ந்த வெங்கட் ரெட்டி மற்றும் சந்தீப் சாய் ஆகியோர் சினிமா மீதுள்ள ஆர்வத்தினால் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக சினிமாத் துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள்.
முன்னணி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த வெங்கட் ரெட்டி மற்றும் சந்தீப் சாய், அங்கிருந்தே தங்களது சினிமா பயணம் பற்றி பேச தொடங்கியவர்கள் ஒரு கட்டத்தில், ஐடி பணியை விட்டுவிட்டு, சினிமாவுக்குள் முழுமையாக பயணிப்பதற்காக தங்களை முறையாக தயாரிப்படுத்திக் கொண்டு, தற்போது ‘யாரோ’ என்ற சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் ஜானர் படத்துடன் கோலிவுட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள்.
இப்படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கும் வெங்கட் ரெட்டி படம் குறித்து கூறுகையில், “கதை சொல்லல் என்பது திரைப்படத் தயாரிப்பின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி என்பதை நான் உணர்கிறேன். நிச்சயமாக நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் ஒரு ஆரோக்கியமான தயாரிப்பை அதிகப்படுத்தி வழங்குகிறார்கள். ஆனால் முடிவில் கதை எவ்வளவு சுவாரஸ்யமானது என்பதை பற்றி தான் பேசப்படும். சந்தீப் சாய் இந்த கதையை விவரிக்கும் போது, நான் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போகிறேன் என்ற எனது அடையாளத்தை உண்மையில் மறந்து, ஒரு ரசிகனாக அதை ரசிக்க ஆரம்பித்தேன். ஆரம்ப கட்டத்தில் நான் இதை பெரிதுபடுத்தி சொல்வது போல தோன்றலாம், ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நிறைய முக்கியத்துவத்துடன் எழுதிய அவரது திறமை தான், கதையை மிகவும் சுவாரஸ்யப்படுத்தியது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒரு தயாரிப்பாளராக நான் உற்சாகமாகவும், ஒரு நடிகராக பதட்டமாகவும் இருக்கிறேன். ஏனெனில் சந்தீப் சாய் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று நான் கருதுவதால் பதட்டமாக இருக்கிறது.” என்றார்.
இயக்குநர் சந்தீப் சாய் படம் குறித்து கூறுகையில், “இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர், கொலை மர்மத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் கதை. ஒரு தனித்துவமான கதையுடன் சொல்லலுடன் சிறப்பான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறோம். பார்வையாளர்கள் அதை விரும்புவார்கள் என்று நம்புகிறோம்.
’யாரோ’ ஒரு தனிமையான நாயகனை பற்றியது. தொடர்ச்சியான நடக்கும் கொலைகளில் அவரை சிக்க வைக்க முயல்கிறார்கள். மேலும் யாரென்றே தெரியாத அந்த ஆபத்தான மற்றும் மிகவும் மிருகத்தனமான கொலைகாரனின் இலக்காகவும் நாயகன் மாறுகிறார். கொலைகாரனின் இருப்பு எல்லா இடங்களிலும் உணரப்படுவதால், நாயகன் தன்னைச் சுற்றியுள்ள கொலைகளின் மர்மத்தை அவிழ்க்கும் திறனை பற்றிய மிகப்பெரிய உளவியல் மற்றும் உடல் ரீதியான சவால்களில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என்றார்.
இப்படி தனித்தனியாக படத்தின் பெருமையை பேசும் இவர்கள், “’யாரோ 2019 ஆம் ஆண்டின் தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படமாக இருக்கும், நாங்கள் சவால் விடுகிறோம்” என்று ஒன்று சேர்ந்து நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...