தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான அதர்வா, திரைப்படம் தயாரித்து கையை சுட்டுக்கொண்டதோடு, பல பிரச்சினைகளையும் எதிர்கொண்டதால், இனி தயாரிப்பு பக்கமே தலைக்காட்ட மாட்டேன், என்பதில் உறுதியாக இருக்கிறார். இருந்தாலும், அவர் நடிக்கும் படங்களும் அவ்வபோது சிக்கல்களில் சிக்கி சின்னாபின்னாமாகிறது.
அந்த வகையில், அதர்வாவின் நடிப்பில் வெளியான ‘100’ படம் ரிலீஸுக்கு முன்பு பல பிரச்சினைகளை எதிர்க்கொண்டு பிறகு ரிலீஸான நிலையில், தற்போது மீண்டும் அப்படத்திற்கு எதிராக நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டு, அதில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான ‘100’ படத்தில் அதர்வா போலீஸ் அதிகாரியாகவும், போலீஸ் கண்ட்ரோல் ரூமை மையமாக வைத்தும் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. படம் வெளியாக ஓரளவு வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆரா சினிமாஸ் ஏற்கனவே இருந்த கடன் பிரச்சினை தொடர்பாக, எம்.எம்.எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே ஆரா சினிமாஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த போது, படம் ரிலீஸான பிறகு கடனை திருப்பித்தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதியை இன்றுவரை ஆரா சினிமாஸ் நிறுவனம் நிறைவேற்றவில்லை என்று தெரிகிறது.
இதை தொடர்ந்து மீண்டும் 100 படத்திற்கு எதிராக எம்.எம்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீபதி, படத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதித்துள்ளார்.
ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐந்தாம் வேதம் சீரிஸ், பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது...
'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம்...
பான் இந்தியா அளவில் பிளாக்பஸ்டர் திரைப்படமான ’ஹனுமா’னின் வெற்றியைத் தொடர்ந்து அதன் சீக்வலான ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து இயக்குநர் பிரசாந்த் வர்மா அறிவித்துள்ளார்...