தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வரும் ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் நிறுவனம், நேற்று தமிழக அரசாங்கம் அறிவித்து இருந்த மாநில விருதுகள் 10 விருதுகளை பெற்று இருக்கிறது.
இது குறித்து பேசிய தயாரிப்பாளர் சதிஷ்குமார், “என்னுடைய திரை உலக பயணத்தில் இன்றைய நாள் மறக்க முடியாத நாளாகும். பல்வேறு தேசிய, சர்வதேச விருதுகள் என்னுடைய படங்கள் மூலம் பெற்று இருந்தாலும்,நம் தாய் தமிழ் நாட்டின் விருதுகள் கிடைக்க பெற்றதில் பேரானந்தம். நிறுவனம் துவங்கிய சில வருடங்களில் விருதுகள் பல வென்றது எங்களது நிறுவனத்துக்கும் எனக்கும் பொறுப்பு உணர்ச்சியை அதிகம் கூட்டுகிறது என்கிறது என்று தான் சொல்லுவேன். நான் சார்ந்து இருக்கும் திரை உலகிகின் சார்பில் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் மாண்பிமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி சொல்கிறேன். இதை போலவே இன்று விருதுகள் கிடைக்க பெற்ற ஏனைய திரை உலகினருக்கும் என் வாழ்த்துக்கள். சவால்கள் நிறைந்த இந்த திரை வாழ்வில் விருதுகளும், பாராட்டும், அங்கீகாரமும் தான் ஆறுதல் என்பதை நானும் அறிவேன். இந்த விருது வழங்கும் நடை முறை தமிழக அரசாங்கத்துக்கும் திரை உலகினருக்கும் மேலும் நல்லுணர்வை ஊட்டும் என நம்புகிறேன்.” என்றார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...