Latest News :

ரஹ்மானுக்கும், லிடியனுக்கும் உள்ள ஒற்றுமை!
Wednesday August-07 2019

உலக அளவில் இசையுலகில் புகழ் பெற்றிருக்கும் லிடியன் நாதஸ்வரனிடம், ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருக்கும் அதே பணிவு, அன்பு, திறமைகள் இருக்கின்றன, என்று பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் பாராட்டியிருக்கிறார்.

 

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகள் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான அறிமுக விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக லிடியன் நாதஸ்வரம், கலந்துக் கொண்டு துவக்கி வைத்தார்.

 

அறிமுக நிகழ்வை தொடர்ந்து லிடியன் நாதஸ்வரம் பள்ளி மாணவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விக்கு அற்புதமாக பதில் அளித்தார். பின்னர் மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்து காண்பித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் லிடியனின் சகோதரி அமுர்த வர்ஷினி பாட்டு பாடி அசத்தினார்.

 

Lydian

 

அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற சர்வதேச தரத்திலான புதிய முயற்சியை பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் வடிவமைத்திருக்கிறார்.

 

இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்கள், ஓவியர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், மேலும் நக்கீரன் கோபால் அவர்களும் கலந்துக் கொண்டார்.

 

நக்கீரன் கோபால் பேசும்போது, ”நான் புத்தக கண்காட்சிக்காக ஈரோடு வந்தேன். அப்போது தம்பி ஸ்ரீதர் என்னை அழைத்ததால் இங்கு வந்தேன். நான் இப்படிப்பட்ட மாணவர்களை பார்ப்பேன் என்று நினைக்கவில்லை, மிகவும் அருமையானவர்கள். நான் ஒரு சாதாரண பள்ளி கல்லூரியில் படித்தேன். பின் பிழப்புக்காக சென்னை வந்தேன். கற்பனை பண்ணாத அளவிற்கு இப்பள்ளியின் சுற்றுப்புற சூழல் அழகாக அமைந்திருப்பது பாராட்டக்குறியது. நான் பெரிய பாக்கியமாக நினைப்பது குட்டி புலி லிடியன் அருகில் இருப்பதுதான். ஏனென்றால் 12 வயதில் உலக சாதனையும் பாராட்டுகளையும் சேர்ப்பது சாதாரணம் அல்ல. எதும் நம்மால் முடியும் என்பதற்கு லிடியன் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இவர் பியானோ வாசிப்பதில் ஒரு ஸ்டைல் உள்ளது. ஆனால் இப்போது மிக சாதாரணமாக அமர்ந்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்தது லிடியனின் தந்தை. இவர்களுக்கு தமிழ் பெயர்களை வைத்திருப்பது. நானும் பிற்காலத்தில் இப்படிப்பட்ட பள்ளிக்கு வந்தேன் என்று பெருமைக்கூறி கொள்வேன்’ என்றார்.

 

லிடியனின் தந்தையும் இசையமைப்பாளருமான வர்ஷன் சதீஷ் பேசும்போது, ”நான் இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சி. எங்களை இங்கு அழைத்ததற்கு நி்ர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் மற்றும் ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி. பள்ளி பருவம் என்பது ஒரு அரிய வாய்ப்பு, அனைவரும் கூறும்படி லிடியன் உலக புகழ், பெருமைகளையும் பாராட்டுக்களையும் பெற்றாலும் என் மகனிற்கு நான் ஒரு ரசிகன். 

 

லிடியன் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பயிற்சி எடுக்கிறார். இந்த வயது மிகவும் அற்புதமான வயது. அதை டெக்னாலஜி எனும் செல்போன், யூடியூப், கேம்ஸ் ஆகியவற்றில் நேரத்தை செலவிடாமல் இருத்தல் நல்லது. என் மகனை நான் பள்ளிக்கு அனுப்பவில்லை, ஆனால் பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருவது சச்சின் டெண்டுல்கர் போன்றோரைத்தான் பார்த்துள்ளேன். இப்போது என் மகன் அப்படி செல்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.” என்றார்.

 

ஏ.பி.ஸ்ரீதர் பேசும்போது, ”என் வாழ்வில் ஒரு சர்வதேச அளவிலான ஓவியக்கல்லூரி ஒன்று கட்ட வேண்டும் என்பது ஆசை. அதன் தொடக்கமாக இப்பள்ளியில் டிப்ஸ் கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி தொடங்கியுள்ளேன். 

 

லிடியனின் தந்தை பார்க்கும் போது என் தந்தை நியாபகம் வருகிறது. என் தந்தையும் இதே போன்றுதான் உற்சாகப்படுத்தினார். உலகம் மறக்கமுடியாத இசையமைப்பளார்களில் ஒருவராக லிடியன் இருப்பார். 2002ல் இருந்து ஏ.ஆர்.ரகுமான் அவர்களை தெரியும். அவரிடம் உள்ள அதே அன்பு, பணிவு, அளவற்ற திறமை லிடியனிடம் உண்டு. மேலும் லிடியனின் பெற்றோர்களை பெருமைப்படுத்துவதில் மகிழ்ச்சிக்கொள்கிறேன். இப்பள்ளியின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைவர் டாக்டர் சின்னுசாமி, நி்ர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

 

Public School

 

இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் அவர்கள் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தார்கள்.

Related News

5415

மக்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் உதயநிதி ஸ்டாலின்! - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து
Monday September-30 2024

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...

கோலாகலமாக நடைபெற்ற ‘பாரத் யாத்ரா’-வின் துவக்க விழா!
Monday September-30 2024

சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...

Recent Gallery