சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபரான வருண் மணியண் ’வாயை மூடி பேசவும்’, ‘காவிய தலைவன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கும் இவரை திரிஷாவின் முன்னாள் காதலர் என்றால் பட்டென்று ஞாபகத்திற்கு வந்துவிடுவார். இவருக்கும் திரிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து பிறகு கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நின்றுவிட்டது.
திருமணம் நின்றாலும் திரிஷாவின் முன்னாள் காதலர் என்று சொன்னால் வருண் மணியனா? என்று கேட்கும் அளவுக்கு இவர் பிரபலமாகிவிட்டார்.
இதற்கிடையில் சென்னையில் தனது விலை உயர்ந்த சொகுசு காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று போலீசில் வருண் மணியன் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மாலை சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சொகுசு கார் ஒன்று அதிவேகத்தில் சீறிப்பாய, அதைப் பார்த்து பயந்துப்போன அப்பகுதி மக்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். காரை பின் தொடர்ந்த போலீசார் மடக்கி பிடித்து, காரை ஓட்டியவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
ஆனால், அந்த வழக்குகள் அத்தனையும் வருண் மணியனின் ஓட்டுநர் மீது போடப்பட்டுள்ளது. காரணம், காரை ஓட்டியது அவர் தான் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இதை மறுக்கும் அப்பகுதி மக்கள், டிரைவராக வேலை பார்க்கும் ஒருவர் விலை உயர்ந்த காரை இப்படி பொறுப்பிலாமல் அதிவேகமாக, அதுவும் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் ஓட்டுவார்களா? என்று கேள்வி எழுப்பியதோடு, காரை அதன் உரிமையாளர் வருண் மணியன் தான் ஓட்டியிருப்பார், போலீஸ் வழக்கு என்றதும், அவரது டிவரை மாட்டிவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார், என்று கூறுகிறார்கள்.
ஆக, காரை அதிவேகமாக ஓட்டி விட்டு, அதன் மூலம் விபத்து ஏற்பட்டால், முதலாளிகள் தங்களது டிரைவர்களை போலீசிக் சிக்க வைத்துவிட்டு எஸ்கேப் ஆவது, சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சகஜமான ஒன்று தான். அதனால, பணக்காரங்களுக்கு இதெல்லாம் சாதரணமப்பா...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...