Latest News :

‘அடுத்த சாட்டை’ படத்தால் ஆசிரியர்களிடம் மாற்றம் வரும் - சமுத்திரக்கனி
Monday August-12 2019

கடந்த 2012 ஆம் ஆண்டு, அறிமுக இயக்குநர் அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சாட்டை’. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘அடுத்த சாட்டை’ என்ற தலைப்பில், அன்பழகன் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

 

இதில், சமுத்திரக்கனி, தம்பி ராமையா, அதுல்யா ரவி, சசிகுமார், ஜூனியிஅர் பாலையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐபிஎஸ் அதிகாரி திலகவதியின் மகன் பிரபு திலக் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. 

 

இந்த விழாவில், தயாரிப்பாளர் பிரபு திலக், படத்தின் முக்கிய நடிகர்கள், சமுத்திரக்கனியின் ஆசிரியர்கள், ரூட்டு தல விவகாரத்தில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்த காவல் உயர் அதிகாரி ஈஸ்வர், இராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், அன்னை கல்விக் குழுமத்தின் தாளாளர் ஹியூமாயுன், பின்னணி பாடகர்கள், பிரபல இயக்குநர்கள், திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் என ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆசிரியர் பகவான், “மாணவர்கள் என்னை பாசப்போராட்டத்தால் போகவிடாமல் தடுத்தது அதிகம் பேசப்பட்டது. நிறைய பேர் எங்கிட்ட பேசுனாங்க. சமுத்திரக்கனி அண்ணனும் பேசுனாரு. ’நான் நடிச்சேன். நீ வாழ்ந்துட்ட தம்பி’னு சொன்னாரு. கல்வி கற்க இயலாத சூழலில் இருந்து நிறைய மாணவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு கத்துக்கொடுத்து வழிகாட்றதுலதான் ஒரு ஆசிரியரின் வேலை முழுமையடையும். அந்தச் சூழலை ’சாட்டை’ படம் மூலமாகச் சொல்லியிருந்தார். மாணவர்களுக்குப் பிடித்த பாடம் என்று எதுவுமில்லை. மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியர் எடுக்கக்கூடிய எல்லாப் பாடமும் அவர்களுக்குப் பிடிக்கும். பள்ளிக்கு ஒருவர் சமுத்திரக்கனியாக இருக்கும் பட்சத்தில் தான் பள்ளியிலும் கல்வியிலும் மாற்றம் வரும். இன்னும் நிறைய சாட்டைகள் உருவாக வேண்டும். மாணவர்கள் மத்தியிலும் கல்வியிலும் புரட்சியை ஏற்படுத்தட்டும்” என்று பேசினார்.

 

இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “‘சாட்டை’ படம் முதல்நாள் தியேட்டர்ல நானும் தம்பி ராமையா அண்ணனும் பார்த்துட்டு இருந்தோம். திரையில் மிகப்பெரிய மேஜிக் நடந்துட்டு இருக்கு. அப்போ அண்ணன் அழுதுட்டே, ‘நாம எங்கேயோ கெடந்தோம்டா. அப்பா டைரக்டர் கிடையாது, அம்மா தயாரிப்பாளர் கிடையாது. ஆனால், நம்ம இரண்டு பேரும் சினிமாவுக்கு வந்து, உருண்டு புரண்டு ஒரு இடத்துல நிக்கிறோம். நம்மளைப் பார்த்து கை தட்டுறாங்க’னு சொன்னாரு. அவர் அழுகையை அடக்க 15 நிமிஷம் ஆச்சு. ஒரு பொறுப்புடன் இருக்கக்கூடிய நடிகனாக என்னை நிலைநிறுத்தியவர் அன்பழகன்.

 

பெருசா ஆ..ஊனு சொல்ற படம் ‘அடுத்த சாட்டை’ இல்லை. பார்வையாளனோடு உரையாடுகிற, தன்னுடைய ஆசிரியரை நினைவுப்படுத்துகிற திரைப்படம்தான் இது. இந்தத் திரைப்படம் வந்தபின் எந்த ஆசிரியரும் தன்னுடைய மாணவனை, ’வெளிய போ’னு சொல்லவே மாட்டாரு. பள்ளியும் இல்லாமல் வீடும் இல்லாமல் மூன்றாவது இடம் ஒன்று வேண்டும்னு மாடசாமி ஐயா எழுதியிருந்தாரு. அடுத்த படம் ‘இன்னொரு சாட்டை’ இதைப்பத்திதான். ‘அடுத்த சாட்டை’ படம் காசு சம்பாதிக்கிறதுக்கான படம் இல்லை.” என்று பேசினார்.

Related News

5455

1500 திரையரங்குகளில் ஓளிபரப்பாகும் ‘வெனோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ பட டிரைலர்!
Tuesday October-01 2024

உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...

மக்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் உதயநிதி ஸ்டாலின்! - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து
Monday September-30 2024

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...

Recent Gallery