நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ஸ்ரீ தயா பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலம் பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், குழந்தைகளுக்கு இழக்கப்படும் தீமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரம்மாண்ட யாத்திரை பயணத்தை நடத்த இருக்கிறார். தேசிய அளவிலான இந்த யாத்திரை, கன்னியாகுமரியில் தொடங்கி டெல்லியில் முடிவடைகிறது.
இந்த யாத்திரையின் சென்னை நிகழ்வு, நாளை (செப்.13) காலை, சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் போது யாத்திரை பயணம் கொடி அசைத்து தொடங்கப்படுகிறது.
இதில், நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, குழந்தைகளுக்கு இழக்கப்படும் தீமைகளுக்கு எதிராக நடத்தப்படும் இந்த தேசிய யாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...