தமிழ் சினிமாவில் புதுமுக நடிகர்கள் அறிமுகம் என்பது அத்திவரதர் தரிசனம் போல 40 வருடத்திற்கு ஒரு முறை நடப்பதல்ல, ஒவ்வொரு நாளும் நடப்பது. ஆனாலும், அவர்களில் மக்கள் மனதில் இடம் பிடிப்பது என்னவோ ஒரு சிலர் மட்டுமே. அந்த ஒரு சிலர்களில் இவரும் ஒருவராக இருப்பாரோ, என்று கோடம்பாக்க பிரபலங்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார் அறிமுக நடிகர் விஜயேந்திரா.
விவசாயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திகில் படமான பி.டி.ஜிஜு இயக்கத்தில் ‘ஈவர் கரவாது’ படத்தில் விவசாயி வேடத்தில் நடித்திருக்கும் விஜயேந்திரா, பகவதி பாலா இயக்கத்தில் ‘வெற்றிக்கு ஒருவன்’ என்ற கலர்புல் கமர்ஷியல் படத்தில் குணச்சித்திர நடிகராகவும், நேசமானவன் இயக்கத்டில் ‘அக்யூஸ்ட்?’ என்ற படத்தில் வில்லத்தனம் கலந்த ஆண்டி ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
விரைவில் ஒவ்வொரு படங்களாக வெளியாக இருக்கும் இந்த மூன்று படங்களும் வெவ்வேறு கதைக்களத்தில் இருப்பது போல, விஜயேந்திராவின் கதாபாத்திரமும் ஒன்றுக்கொன்று பெரிய வேறுபாடுகளுடன் இருக்கிறது. அந்த வேறுபாட்டை கெட்டப்பில் மட்டும் இன்றி நடிப்பிலும் காண்பித்திருக்கும் விஜயேந்திரா, தனது ஆரம்பகால சினிமா பயணத்தை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டது இதோ,
கோவையில் பிறந்து வளர்ந்து அங்கேயே தொழில் செய்து வருகிறேன். தொழிலதிபர்கள் சினிமாவில் பண முதலீடு செய்து ஹீரோ சான்ஸ் பெறுவது போல நானும் நடிக்கும் வாய்ப்பை பெறவில்லை. சினிமாவுக்காக எப்படி ஒவ்வொரு கட்டமாக வரவேண்டுமோ, அப்படி தான் நானும் வந்தேன்.
கோவையில் எனது தொழில் ஒரு பக்கம் இருந்தாலும், என்னை போல சினிமா மீது ஆர்வம் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களில் நடித்து வந்தேன். அதில் ஒரு குறும்படத்தில் கவுன்சிலர் வேடத்தில் நடித்திருந்ததை பார்த்த ‘ஈவர் கரவாது’ பட இயக்குநர் பி.டி.ஜிஜு, விவசாயி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். திகில் படத்தின் பின்னணியில் விவசாயிகளைப் பற்றி சொல்லுயிருக்கும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம், விவசாயம் அழியாமல் பாதுகாக்க ஒரு விவசாயி, எப்படி போராடுகிறார் என்பதையும், விவசாயத்திற்கு இளைஞர்கள் வர வேண்டும் என்பதையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம்.
சினிமா என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்காக நான் பல வருடங்கள் போராடி தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன், இந்த வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும், என்று விரும்புகிறேன்.
ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிக்கவே எனக்கு விருப்பம். முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் படத்தில் குணச்சித்திர வேடங்கள் கிடைத்தாலும் நடிக்க ரெடியாகவே இருக்கிறேன். அப்படி சில வாய்ப்புகள் எனக்கு வந்திருக்கிறது. அது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருவதால், விரைவில் அறிவிப்பேன்.
இப்படி உற்சாகமாக பேசிய விஜயேந்திரா நடிப்பில் முதலாவதாக ‘ஈவர் கரவாது’ படம் வெளியாக உள்ளது. அடுத்ததாக அவர் நடித்திருக்கும் ‘வெற்றிக்கு ஒருவன்’, ‘அக்யூஸ்ட்?’, ‘தடை செய்யப்பட்ட பகுதி’ ஆகியப் படங்கள் வெளியாக உள்ள நிலையில், மேலும் சில புதுப்படங்களிலும் கமிட் ஆகி வருகிறார். அப்படங்கள் குறித்து விரைவில் அறிவிப்பாராம்.
ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐந்தாம் வேதம் சீரிஸ், பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது...
'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம்...
பான் இந்தியா அளவில் பிளாக்பஸ்டர் திரைப்படமான ’ஹனுமா’னின் வெற்றியைத் தொடர்ந்து அதன் சீக்வலான ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து இயக்குநர் பிரசாந்த் வர்மா அறிவித்துள்ளார்...