கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 55 நாட்களை கடந்திருக்கிறது. முதல் இரண்டு சீசன்களில் இருந்த காதல், மோதல், தற்கொலை போன்ற ஒரே சம்பவங்களை வைத்து மூன்றாம் சீசன் நடகர்த்தப்பட்டாலும், இரண்டு சீசன்களை விட மூன்றாம் சீசன் சற்று பரபரப்பாகவே இருக்கிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் போட்டி திரைக்கதை எழுதப்பட்டு சித்தரிக்கப்படும் நிகழ்ச்சி என்ற குற்றச்சாட்டை பெரும்பாலன ரசிகர்கள் முன் வைக்கிறார்கள். ஆனால், அப்பட்டிப்பட்ட நிகழ்ச்சி அல்ல, என்று பிக் போட்டியில் பங்கேற்ற நடிகை சம்யுக்தா ஹெக்டே, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார்.
அதே சமயம், பிக் பாஸ் விடு மிகவும் மோசமானது, என்றும் சக்யுக்தா குறிப்பிட்டார். காரணம், மனித தொடர்பு உள்ளிட்ட வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் அந்த வீட்டில் இருப்பது தான் போட்டி, ஆனால் அந்த 100 நட்கள் மட்டும் அல்ல, ஒரு சில நாட்களையே அந்த வீட்டில் கடக்க முடியாத அளவுக்கு நம் மனது அழுத்தமாகிவிடும், என்று கூறிய சம்யுக்தா, நாம் எதை செய்ய கூடாது என்று நினைக்கிறோமோ அதை செய்ய தூண்டப்படும், என்றும் கூறியிருக்கிறார்.
சக்யுக்தாவின் இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று எலிமினேட் ஆகிய அபிராமியின் செயல் இருந்தது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பெரும்பாலான போட்டியாளர்கள் அழுதபடி வெளியேறி வந்த நிலையில், நேற்று வெளியேற்றப்பட்ட அபிராமி, ரொம்ப மகிழ்ச்சியாகவும், ”விட்டால் போதும்டா சாமி” என்று நினைத்தது போல, ஜாலியான மூடில் தான் வெளியேறினார்.
அப்படியானால் பிக் பாஸ் வீட்டில் இருப்பது ஏதோ நரகத்தில் இருப்பது போன்ற ஒரு கசப்பான அனுபவத்தை கொடுக்கும் என்பது தெரிகிறது.
மேலும், பிக் பாஸில் வெளியேற்றப்பட்டு தற்போது மீண்டும் எண்ட்ரியாகியிருக்கும் வனிதா, வெளியே போன பிறகு அளித்த பேட்டியில், இரவு படுக்கும் போது லைட் ஆப் செய்வது போல காண்பிப்பார்கள், ஆனால் சில நிமிடங்களில் மீண்டும் லைட் ஆன் செய்துவிடுவார்கள். அந்த வெளிச்சத்தில் தான் தூங்க வேண்டும். வெளிச்சத்தில் தூக்கமும் வராது, என்று கூறியிருந்தார்.
ஆக, பிக் பாஸ் போட்டியார்கள் ஒரு மனிதனுக்கு தேவையான சில விஷயங்களை பறிகொடுத்துவிட்டு தான் அந்த வீட்டில் இருக்கிறார்கள் என்பது தெரிவதோடு, அதனால் அவர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்படுவதும் உறுதியாகியுள்ளது.
மொத்தத்தில், பிக் பாஸ் வீடு மோசமானதாக தான் இருக்கும் என்று உணர முடிகிறது.
ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐந்தாம் வேதம் சீரிஸ், பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது...
'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம்...
பான் இந்தியா அளவில் பிளாக்பஸ்டர் திரைப்படமான ’ஹனுமா’னின் வெற்றியைத் தொடர்ந்து அதன் சீக்வலான ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து இயக்குநர் பிரசாந்த் வர்மா அறிவித்துள்ளார்...