கிரேட் எம்பரர் புரொடக்ஷன்ஸ் எனும் புதிய படநிறுவனம் சார்பில் சி.பிரேம்குமார் மிகுந்த பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் ’சீமத்தண்ணி’.
பல முன்னனி இயக்குனர்களிடம் 25க்கும் மேற்ப்பட்ட படங்களில் துணை,இணை இயக்குனராக பணியாற்றிய விஜய்மோகன்..இப்படத்தின் கதை,திரைக்கதை,வசனம் எழுதி.இயக்குனராக அறிமுகமாகிறார்.
விதார்த்,விஜய் வசந்த கதாநாயகர்களாக நடிக்க,கதாநாயகிகளாக சாந்தினி மற்றும் சுபிக்ஷா நடிக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு,ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்க, மலர்விழி என்ற முக்கிய வேடத்தில் சாந்தினி நடிக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் சமீபத்தில் நடைபெற்றது. இயக்குநர் ஏ.சற்குணம் கிளாப் போர்டு அடித்து படப்பிடிப்பினை தொடங்கி வைத்தார்.
மஞ்சள் படத்திற்கு பின் ’மசானி’ ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சதீஇஷ் திருமூர்த்தி இசையமைக்க, சி.எஸ். பிரேம்குமார் எடிட்டிங் செய்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜய்மோகன் இயக்குகிறார். நாதன் லீ ஆக்ஷன் காட்சிகளை வடிவகைக்க, விஜயராஜன் கலைத் துறையை கவனிக்கிறார். தினேஷ், ஜாய் மதி ஆகியோர் நடனத்தை வடிவமைக்க, நடராஜன் உடலைகளை வடிவமைக்கிறார். நந்தலாலா, சீர்காழி சிற்பி, மோகன்ராஜ் ஆகியோர் பாடல்கள் எழுத, தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக விஜய் கே.செல்லையா பணிபுரிய, சி.பிரேம்குமார் தயாரிக்கிறார்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...