ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு ஆகியோரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘கோமாளி’ ரசிகர்களிடம் நல்ல ரவேற்பை பெற்றுக்கிறது. தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷும், படக்குழுவினருக்கு பார்ட்டி வைத்து வெற்றியை கொண்டாடியுள்ளார்.
அதே சமயம், வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ், ‘கோமாளி’ படத்தால் ஏமாளியாகவும் ஆக்கப்பட்டிருக்கிறார்.
’கோமாளி’ படம் ரிலிஸுக்கு முன்பு, கதைக்கு பார்த்திபனிடம் உதவியாளராக இருந்த உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி சொந்தம் கொண்டாடியதோடு, என் கதையை திருட்டிடாங்கோ, என்று கதையாசிரியர் சங்கத்தில் புகாரும் அளித்தார். புகாரை விசாரித்த சங்கத்தில் தல, பாக்யாராஜ், இது திருடப்பட்ட கதை தான், என்று தீர்ப்பு வழங்கிவிட்டார்.
இதன் பிறகு ஐசரி கணேஷிடம் நடத்தப்பட்ட பஞ்சாயத்தில், படத்தின் டைடில் கார்டில் கதை என்று கிருஷ்ணமூர்த்தியின் பெயர் போடுவதோடு, இழப்பீடாக ஒரு தொகை தருவதாகவும் கூறியிருக்கிறார். அதன்படி, டைடில் கார்டில் பெயர் போட்டவர், இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், கதை திருட்டில் பெரிய ட்விஸ் ஒன்று நிகழ்ந்துள்ளது. ’கோமாளி’ படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் மீது கதை திருட்டு புகார் கூறி 10 லட்ச ரூபாயை பெற்றிருக்கும் கிருஷ்ணமூர்த்தியும் ஒரு இடத்தில் இருந்து இந்த கதையை திருடியிருக்கிறாராம்.
ஆம், ’கிக்கின் இட் ஓல்ட் ஸ்கூல்’ என்ற அமெரிக்கப் படத்தின் கரு தான் இந்த கதையாம். ஆக, அந்த அமெரிக்க படத்தை பார்த்துதான் இந்த இரண்டு பேரும் கதையை சுட்டிருக்கிறார்கள். இந்த விஷயம் தெரியாமல், தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.10 லட்சத்தை கொடுத்து ஏமாளியாகியிருக்கிறார்.
அவர் நிலை அப்படி இருக்க, ஆங்கிலப் படத்தில் இருந்து தான் இந்த கதையை சுட்டேன், என்று பிரதீப் ரங்கநாதனும் கூறாமல், தனது தயாரிப்பாளர் ஏமாளியாவதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘கோமாளி’ என்ற தலைப்பில் படம் தயாரித்த ஐசரி கணேஷ் பணம் கொடுத்து ஏமாளியாகியிருக்க, பஞ்சாயத்து மூலம் கே.பாக்யராஜும் ஏமாளியாக்கப்பட்டிருக்கிறார்.
ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐந்தாம் வேதம் சீரிஸ், பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது...
'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம்...
பான் இந்தியா அளவில் பிளாக்பஸ்டர் திரைப்படமான ’ஹனுமா’னின் வெற்றியைத் தொடர்ந்து அதன் சீக்வலான ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து இயக்குநர் பிரசாந்த் வர்மா அறிவித்துள்ளார்...