Latest News :

‘தல 60’ குறித்த லேட்டஸ் அப்டேட்!
Friday September-06 2019

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அதே டீம் அடுத்த படத்திலும் இணைகிறார்கள். அஜித்தின் 60 வது படமாக உருவாக உள்ள இப்படத்தை ‘தல 60’ என்று அழைக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி துவங்க இருந்த நிலையில், சில காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, படத்தில் நடிப்பவர்கள் குறித்து தினமும் எதாவது தகவல்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், அஜித்துக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பதாக தகவல் பரவியது.

 

இந்த நிலையில், அஜய் தேவ்கன் அஜித்துக்கு வில்லனாக நடிப்பது குறித்து வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்திருக்கும் ‘தல 60’ படக்குழு, இயக்குநர் வினோத், அஜித் மற்றும் போனி கபூர் இவர்களை தவிர ‘தல 60’ படத்திற்காக வேறு யாரும் இன்னும் இணையவில்லையாம்.

 

மேலும், போனி கபூர் தயாரிப்பில் இந்தி படம் ஒன்றில் அஜய் தேவ்கன் நடித்து வருகிறாராம். இதை தான் தவராக அஜித் படத்தில் அவர் நடிப்பதாக தகவல் பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

’தல 60’ படப்பிடிப்பு இம்மாதம் துவங்க உள்ளது. படப்பிடிப்பு தொடங்கியவுடன் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவலை படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளதாம்.

Related News

5583

1500 திரையரங்குகளில் ஓளிபரப்பாகும் ‘வெனோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ பட டிரைலர்!
Tuesday October-01 2024

உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...

மக்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் உதயநிதி ஸ்டாலின்! - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து
Monday September-30 2024

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...

Recent Gallery