பிக் பாஸ் சீசன் 3, தற்போது 80 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பல பரபரப்பான சண்டைகள் அரங்கேறி வருகிறது. அதிலும், போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோரால் ஏற்படும் சண்டைகள் ஒரு பக்கம் இருக்க, தர்ஷனை காதல் விவகாரத்தில் சிக்க வைத்திருக்கிறார்கள்.
தர்ஷன் மாடலிங் செய்துக் கொண்டிருந்த போது அவருக்கு பல உதவிகளை செய்தவர் நடிகை சனம் ஷெட்டி. ஏன், அவர் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்பதற்கு காரணமே சனம் ஷெட்டி தானாம். இப்படி தர்ஷனை ஒரு நல்ல நிலைக்கு உயர்த்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சனம் ஷெட்டி, அவரை காதலிப்பதாக பல பேட்டிகளில் கூறி வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் தர்ஷன், ஷெரினை காதலிப்பதாக வனிதா கூறி பெரிய ரகளை செய்து வருகிறார்.
ஆனால், இதை மறுக்கும் ஷெரின் எனக்கும் தர்ஷனுக்கும் இடையே இருப்பது வெறும் நட்பு மட்டுமே, காதல் இல்லை, என்று தெளிவாக கூறிவிட்டார்.
இந்த நிலையில், பிக் பாஸ் டைடில் வின்னராக வரவேண்டிய தர்ஷன், காதல் விவகாரத்தால் அதை இழக்க கூடும் என்று சிலர் கூறுகிறார்கள். அதே சமயம், இப்படி ஒரு பிரச்சினை வர காரணமே சனம் ஷெட்டி கொடுக்கும் பேட்டிகள் தான். அவர் வெளியே இருந்துக் கொண்டு தர்ஷனை பயன்படுத்தி தனக்கு விளம்பரம் தேடிக்கொள்கிறார். இதனால், தர்ஷனை காதலிப்பதாக பல ஊடங்களில் அவர் பேட்டியளித்து வருகிறார், என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து, நடிகை சனம் ஷெட்டி, சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அழுதபடியே பேசுபவர், ”தர்ஷனின் முன்னேற்றத்திற்காக நான் பலவற்றை செய்திருக்கிறேன். அவனுடன் எப்போதும் இருக்க வேண்டும், என்று தான் நான் விரும்புகிறேன். ஆனால், என்னால் தான் அவனது வெற்றி பறிபோகப்போகிறது, என்று ஒருவர் கூறுகிறார். அதனால், இனி நான் தர்ஷனை பற்றி பேசப்போவதில்லை, அவன் வாழ்வில் நான் இல்லை” என்று கூறியிருக்கிறார்.
சனம் ஷெட்டியின் இந்த கண்ணீர் வீடியோவை பார்க்கும் போது பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அதாவது, கடந்த 2012 ஆம் ஆண்டு பார்த்திபன் நடிப்பில் வெளியான 3டி படமான ‘அம்புலி’ மூலம் தான் சனம் ஷெட்டி நடிகையாக அறிமுகமானார். இதே படத்தில் ஹீரோவாக அறிமுகமான அஜய் என்பவர், சனம் ஷெட்டியை காதலித்தார். அவரது காதலை சனம் ஏற்க மறுத்ததால், அஜய் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார்.
இப்போது, சனம் ஷெட்டி தர்ஷனுக்காக கண்ணீர் மட்டும் தான் விடுகிறார், ஆனால் அந்த அஜயோ சனத்திற்காக தனது உயிரையே விட்டிருக்கிறார், காதல் பொல்லாதது தான்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...