கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3-யின் 17 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற சரவணன், ரசிகர்களின் பேவரைட் போட்டியாளராகவும் திகழ்ந்தார். தனக்கு தோன்றியதை வெளிப்படையாக பேசிய சரவணன், கல்லூரி நாட்களில் பெண்களை உரசுவதற்காகவே பஸ்ஸில் சென்றேன், என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
பிறகு தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டவர், பிக் பாஸ் வீட்டில் சேரனுடன் சண்டை போட, அதுவும் சர்ச்சையில் முடிந்தது. பல இயக்குநர்கள் சரவணனுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் திடீரென்று வெளியேற்றப்பட்டார். அவர் மீது எந்த தவறும் இல்லாத நிலையில், பெண்கள் குறித்து அவர் பேசியதற்கு தண்டனையாக வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் கூறினார். ஆனால், அவர் வெளியேற்றப்பட்டதற்கு உண்மையான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. அதே சமயம், இயக்குநர் சேரனுக்காகவே சரவண் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பிக் பாஸ் நடுவரான கமல்ஹாசன், இந்த விவகாரத்தில் சரவணனுக்காக எதுவும் பேசாமல் அவரை வெளியேற்றினார். இது சரவணனுக்கு பெரும் அவமானமானது.
இந்த நிலையில், தமிழக அரசு நடிகர் சரவணனுக்கு உயரிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது, தமிழக அரசு சார்பில் குறைந்த முதலீட்டில் எடுக்கப்படும் தரமான மற்றும் சமூக பொறுப்புள்ள படங்களுக்கு ரூ.7 லட்சம் மாணியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவில் நடிகர் சரவணன் தமிழக அரசால் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, சரவணனுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...