ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவரது அடுத்தப் படத்தையும் முருகதாஸ் தான் இயக்கப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
ஆனால், வெறும் வதந்தியே என்று கூறப்படுகிறது. ரஜினி தனது அடுத்தப் படத்தின் வேலையில் இறங்கியிருந்தாலும், இயக்குநரை இன்னும் முடிவு செய்யவில்லையாம். தற்போது தயாரிப்பாளரை மட்டுமே ரஜினி தேர்வு செய்திருக்கிறாராம்.
அந்த வகையில், இதுவரை ரஜினியை வைத்து படம் தயாரிக்க ஒரு நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த், நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து தயாரிப்பு நிறுவனத்திற்கும், ரஜினிகாந்த் தரப்புக்கும் இடையே முதலில் சம்பளம் விஷயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அப்போது ரஜினிகாந்து இதுவரை தான் வாங்கிய சம்பளத்தை திடீரென்று உயர்த்திவிட்டாராம். அதன்படி, ரஜினி ரூ.90 கோடி சம்பளம் கேட்டதாகவும், இதை கேட்ட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உரைந்து போய்விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்துக்கு ரூ.90 கோடி சம்பளம் கொடுத்துவிட்டால், இயக்குநர், நடிகை சம்பளம், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம் மற்றும் படத்தின் பட்ஜெட் என்று மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டி வரும், அப்படி செய்தாலும், லாபம் எடுக்க முடியுமா? என்பது சந்தேகம் தான், என்று தயாரிப்பு தரப்பில் பேசிக்கொண்டார்களாம்.
இது ரஜினிகாந்தின் காதுக்கு போக, தனது சம்பளத்தை ரூ.75 கோடியாக நிர்ணயம் செய்தாராம். இதை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர்கள் தற்போது இயக்குநர் குறித்து ரஜினிகாந்திடம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் ‘தர்பார்’ படத்திற்குப் பிறகு தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...