தமிழ் சினிமாவில் டக்கென்று உயரத்திற்கு வந்த ஹீரோக்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். டாப் 5 ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், சமீபகாலமாக தொடர்ந்து தோல்விப்படங்களை கொடுத்து வருகிறார். காமெடி, காதல், ஆக்ஷன் என்று அனைத்து ஜானரிலும் அவர் முயற்சித்தாலும் வெற்றி மட்டும் கிடைக்கவே இல்லை.
இதனால், எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் சிவகார்த்திகேயன், பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தை தான் அதிகமாக நம்பியிருக்கிறார். சிறுவர்களை வைத்து பெரியவர்களுக்கு அட்வைஸ் செய்து, தரமான படங்களை கொடுத்து வந்த இயக்குநர் பாண்டிராஜ், ‘மெரினா’ படத்தில் இருந்து பணம் பார்க்கும் கமர்ஷியல் படங்களை இயக்க தொடங்கிவிட்டார். கடைசியாக அவர் இயக்கிய ‘கடைக்குட்டி சிங்கம்’ படமும் இதே பாணியில் நட்சத்திர பட்டாளங்கள் நிறைந்த கமர்ஷியல் படமாக இருந்து வெற்றி பெற்றதால், சிவகார்த்திகேயனை வைத்தும் அதே பாணியிலான படத்தை தான் எடுத்திருக்கிறார்.
அண்ண, தங்கை பாசத்தை மையப்படுத்திய இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானதோடு, ஒரு நாளைக்கு ஆயிரம் முறை போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை, என்று சன் டிவி மற்றும் அதனை சார்ந்த சேனல்களில் ஒளிபரப்பி வருகிறார்கள்.
இப்படி படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் படத்திற்கு வெயிட்டாக புரோமோஷன் செய்தாலும், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ டிரைலரால் புலம்ப தொடங்கியிருக்கிறார்கள். காரணம், இயக்குநர் பாண்டிராஜ், ‘கடைக்குட்டி சிங்கம்’ பாணியில் படத்தை எடுத்திருந்தால் கூட பரவாயில்லை, தமிழ் சினிமாவின் அதர பழசான பாணியில் இந்த அண்ணன், தங்கை பாசக் கதையை எடுத்திருப்பது டிரைலரில் அப்பட்டமாக தெரிகிறது.
ஏற்கனவே தொடர் தோல்விப் படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன், வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டு ரசிகர்களை ஈர்ப்பதை விட்டுவிட்டு, இப்படி அரைத்த மாவை திரும்ப திரும்ப அரைத்துக் கொண்டிருக்கும் பாண்டியராஜுடன் இணைந்து, அரைத்த மாவை கூட அரைக்காமல், புளித்த மாவை அரைத்துவிட்டாரே, என்று ரசிகர்கள் புலம்புகிறார்கள்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...