ஓவியா இல்லாததால் பொலிவு இழந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் பொலிவானதாக்க நிகழ்ச்சி குழு பல முயற்சிகளை செய்தும் அது பயன் அளிக்கவில்லை. இதற்கிடையே, பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை தங்கி வெற்றி பெறும் முனைப்பில் போட்டியாளர்கள் இறங்கியுள்ளார்கள்.
இதில், எப்போதும் போல சினேகன், மற்றவர்களை தூண்டிவிட ஆரம்பித்திருக்கிறார். அதேபோல், தான் போட்டியில் வெற்றி பெற்றால் நூலகம் கட்டுவதாகவும், அதை கமலை வைத்தே திறப்பேன் என்றும் ஐஸ் வைத்தும் வருகிறார்.
மறு முனையில் சுஜா வாருணி, ஹாரிஸ் போன்றவர்கள் வெற்றிக்காக உண்மையாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனாலும், பிக் பாஸ் போட்டியாளர்களிடம் தற்போது போட்டியை காட்டிலும் பொறாமையே உள்ளதால், இனி வரும் காலங்களில் பிக் பாஸ் போட்டி பயரங்க விறுவிறுப்பாக இருக்கும்.
இந்த நிலையில், தற்போது போட்டியாளர்களில் சுஜா வாருணி மற்றவர்களால் கட்டம் கட்டப்படுகிறார். அதனால், கூடிய விரைவில் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...