சாய் சினிமாஸ் தயாரிப்பில், ஓ.ராஜா கஜினி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘உற்றான்’. அறிமுக ஹீரோ ரோஷன் நடித்திருக்கும் இப்படத்தில் ஹிரோஷினி, வெயில் பிரியங்கா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். ரவிசங்கர், வேலராம மூர்த்தி, மதுசூதனன், ஜின்னா, கானா சுதாகர், மதுமிதா, இயக்குநர் சரவணன் சக்தி, இமான் அண்ணாச்சி, விஜய் டிவி கோதண்டம், காதல் சரவணன், சுலக்ஷனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஹாலிக் பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு, ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். மோகன்ராஜ், அருண் பாரதி, கானா சுதாகர், ரோகேஷ் ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது. கலைப்புலி s தாணு, பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, ரமேஷ் கண்ணா, ஆர்.வி.உதயகுமார், கே.ராஜன், ஒளிப்பதிவாளர் சுகுமார், நடிகர் ஆரி, நடிகர் ராஜேஷ், இ.ராமதாஸ், சித்ரா லக்ஷ்மணன், இயக்குனர் பேரரசு, கலைப்புலி சேகரன், நடிகர் ஜெய்வந், கவிஞர் பிறை சூடன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் உற்றான் பட இயக்குநர் ஓ.ராஜா கஜினி பேசுகையில், “’உற்றான்படத்தில் நடித்த ரோஷனும், ஹிரோஷினி அற்புதமாக நடித்துள்ளனர். சிறப்பான பாடல்களை தந்த ரகுநந்தன் விழா நாயகனுக்கு நன்றி. 18 படங்களில் வேலை செய்து வந்தேன். எனக்காக யாரும் முன்வரவில்லை. அதனால் நானே தயாரிப்பில் இறங்கி இப்படத்தை தயாரித்தேன். .கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும். நாம் ரசிக்கும் அனைத்து விஷயங்களும் இப்படத்தில் உள்ளன.” என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “இந்த இசை வெளியீட்டு விழா என் குடும்பவிழா. என் வாழ்க்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தான் ஆரம்பித்தது. என் அன்புச் சகோதரரின் பேரன் தான் இப்படத்தின் ஹீரோ ரோஷன். இந்த ஹீரோவுக்கு முதலில் அவரது பெற்றோர் வைத்த பெயர் உதயகுமார். அந்த வகையில் இப்படத்தின் ஹீரோ நான் தான். இப்படத்தின் டைட்டிலே எனக்கு மிகவும் பிடித்தது. தமிழை காப்பாற்ற போறேன் என்று சொல்பவர்களின் படங்களின் டைட்டில் கூட இவ்வளவு அழகாக இல்லை. உற்றான் என்ற டைட்டிலுக்காகவே இந்த பட டீமை கொண்டாட வேண்டும். இந்தப்படத்தின் டரைலரும் பாடல்களும் அருமை. இந்தப்படத்தில் ரோஷன் ரொம்ப அசால்டா நடிச்சிருக்கார். இந்த இயக்குநர் இந்தப்படத்தை பல கஷ்டங்களையும் துரோகங்களையும் கடந்து எடுத்திருக்கிறார். அந்த வலிகளுக்கு எல்லாம் மருந்தாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும்.” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “உருப்படாதவங்க சினிமாவுக்கு வரலாம். ஆனால் சினிமாவுக்கு வந்து உருப்படாமல் போய்விடக்கூடாது. உற்றான் ட்ரைலரைப் பார்க்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு. கல்லூரி காதல் கதைகளைப் பார்த்தே அதிகநாள் ஆகிவிட்டது. இது அப்படியொரு படமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தில் ஹீரோவுக்கு பெயர் விஜய். ஆனால் பாட்டில் அல்டிமேட்னா தல அப்படின்னு ஒரு வரி வச்சிருக்கார். ஆக சரியா பேலன்ஸ் பண்ணி இருக்கிறார். அதனால் இயக்குநர் ராஜா கஜினி விவரமாகத் தான் இருக்கிறார். இந்த ஹீரோ ரோஷன் முழுக்க முழுக்க ஹீரோவுக்கு தகுதியானவர். இவரிடம் அல்லு அர்ஜுன் சாயல் இருக்கு. உற்றார் வேறு உறவினர் வேறு. உறவுகளுக்கு ஈக்குவலான ஆட்களை உற்றார் என்று சொல்வோம். மாமன் மச்சான் போன்றவர்கள் தான் உறவினர்கள். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருமே உற்றார்கள் தான். இவர்கள் அனைவரின் வாழ்த்தும் இந்தப்படக்குழுவிற்கு கிடைத்திருக்கிறது.” என்றார்.
தயாரிப்பாளர் தாணு பேசுகையில், “இந்த உற்றான் திரைப்படம் மாபெரும் வெற்றியடையும். காரணம் ரோஷனின் தந்தை சுபாஷ் அவர்களின் மனிதநேயம் தான். சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டுகளை பெரும் ரோஷனுக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.
நாயகன் ரோஷன் பேசுகையில், “எங்கள் அழைப்பை ஏற்று இந்த விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி. என்னை மனமார வாழ்த்திய அணைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி. கண்டிப்பாக இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும். உங்கள் ஆதரவு என்றும் எங்களுக்கு தேவை. பிரமாதமான இசையை தந்த ரகுநந்தன் அவர்களுக்கு நன்றி” என்றார்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...