டப்மாஸ் மூலம் பிரபலமான மிருணாளினி, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சிறு வேடம் ஒன்றில் நடித்திருந்தார். தற்போது அவரை தனக்கு ஜோடியாக்கி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக சசிகுமார் அறிமுகப்படுத்துகிறார்.
சிவகார்த்திகேயனை வைத்து தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களையும், ஒரு தோல்விப் படத்தையும் கொடுத்த இயக்குநர் பொன்ராம், சசிகுமாரை வைத்து படம் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘எம்.ஜி.ஆர் மகன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக டப்மாஸ் மிருணாளினி நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சரண்யா, சமுத்திரக்கனி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பொன்.ராம் இயக்குகிறார். ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார். துரைராஜ் கலையை நிர்மாணிக்கிறார்.
ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் நேற்று தொடங்கியது.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...