இந்திய சினிமாவின் திரைக்கதை கிங்கான பாக்யராஜ், தனது தீர்ப்புகள் மூலமும், கதை திருட்டு விவகாரங்களில் தயாரிப்பாளர்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதினாலும், அவரை ‘பஞ்சாயத்து கிங்’ என்று அழைக்கும் அளவுக்கு, கதை திருட்டு விவகாரங்கள் தொடர்பாக அவர் நடத்திய அத்தனை பஞ்சாயத்துகளிலும் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
விஜயின் ‘சர்கார்’ படத்தில் தொடங்கி, சமீபத்தில் வெளியான ஜெயம் ரவியின் ‘கோமாளி’ வரை பாக்யராஜ் செய்த அத்தனை பஞ்சாயத்துக்களின் முடிவிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைத்ததாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.
இப்படி, தனது பஞ்சாயத்துக்கள் மூலம் எழுத்தாளர் சங்கத்தை பிரபலப்படுத்திய பாக்யராஜ், அதே எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக முயன்ற எழுத்தாளர் ஏ.எல்.சூர்யாவை அலக்கழித்து ஆதாங்கப்பட வைத்திருக்கிறார்.
பிரபல எழுத்தாளரும், மோட்டிவேஷன் பேச்சாளருமான ஏ.எல்.சூர்யா, பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார். அதில் ஒன்று தான் ’அனிதா பத்மா பிருந்தா’. திரைத்துறையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஒருவரும், பிரபல இயக்குநர் ஒருவரும் இடம் பெற்றிருக்கும் இந்த நாவலில், தமிழ் சினிமாவில் பல இருட்டுப் பக்கங்கள் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.
இந்த நாவலை திரைப்படமாக எடுக்க முடிவு செய்த ஏ.எல்.சூர்யா, அதற்கான கதையை முழுவதுமாக முடித்துவிட்ட நிலையில், எழுத்தாளர்கள் சங்கத்தில் கதையை பதிவு செய்வதற்காக, சங்கத்தில் உறுப்பினராக இணைய விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதன்படி சங்க ஊழியர்கள் கேட்ட அனைத்து விபரங்களையும் வழங்கியவர், சந்தா கட்டணமாக கேட்ட ரூ.7,000-க்கான டிடியையும் எடுத்துக் கொடுத்துவிட்டாராம். அனைத்தையும் பெற்றுக் கொண்டவர்கள் ஒரு மாதத்தில் அடையாள அட்டை வழங்குவதாக கூறியிருக்கிறார்கள். ஆனால், 6 மாதம் ஆகியும் இதுவரை அடையாள அட்டை கொடுக்கவில்லையாம்.
பல முறை ஏ.எல்.சூர்யா, சங்க ஊழியர்களை தொடர்புகொண்டு கேட்டதற்கு, இப்போ...அப்போ...என்று கூறியவர்கள், இறுதியாக “தலைவர் கையெழுத்து போட்டா தான் கொடுக்க முடியும், அவரு இன்னும் போடல” என்று கோபமாக சொன்னதோடு, “உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்க” என்றும் சூர்யாவிடம் சொல்லியிருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில், ஒரு கையெழுத்து போடுவதற்காக தலைவர் பாக்யராஜ் 6 மாதங்களாக எதற்காக காலதாமதம் படுத்துகிறார், என்பது குறித்து எந்த காரணத்தையும் சொல்லாத ஊழியர்கள், எழுத்தாளர்களுக்கான சங்கம் என்பதை மறந்துவிட்டு ஒரு எழுத்தாளரை அவமதிக்கும் விதத்தில் பதில் அளித்த விதம் ஏ.எல்.சூர்யாவை கடுமையாக பாதித்திருக்கிறது.
கதை திருட்டு விவகாரங்களில் பஞ்சாயத்து என்றால் ஆர்வம் காட்டும் தலைவர் பாக்யராஜ், ஒரு எழுத்தாளரை மட்டும் இப்படி அலக்கழிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஏ.எல்.சூர்யா, தனக்கு அடையாள அட்டை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, எதிர்காலத்தில் இனி யாருக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது, அதற்காகவே இந்த தகவலை பத்திரிகைகளிடம் பகிர்ந்துக்கொண்டேன், என்றும் கூறியிருக்கிறார்.
தற்போது படப்பிடிப்புக்கு தயாராக இருக்கும் ஏ.எல் சூர்யா ‘அனிதா பத்மா பிருந்தா’ என்ற தலைப்பை கில்டில் பதிவு செய்ததோடு, படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் வயநாட்டை தேர்வு செய்துள்ளார். ஆனால், மழை காரணமாக அப்பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால், நிலமை சீராவாதற்காக காத்துக்கொண்டிருக்கிறார். இன்னும் இரண்டு மாதங்களில் வயநாட்டில் படப்பிடிப்பு தொடங்க இருப்பவர், எழுத்தாளர் சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சினை மூலம் ரொம்பவே அப்செட்டாகியுள்ளாராம்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...