தமிழ் சினிமா மட்டும் அல்ல, இந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் இந்தியாவையும் தாண்டி, சில வெளிநாடுகளிலும் வசூல் சாதனைப் படைத்து வருகிறது. விரைவில் தீவிர அரசியலில் ரஜினிகாந்த் ஈடுபடப்போவதாக பலர் கூறி வரும் நிலையில், அவர் அடுத்தடுத்து புதிய படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக சிவா, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சில இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டு வைத்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரது அடுத்தப் படத்தையும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப் போவதாகவும், அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக ரஜினி தரப்பு அறிவிக்க இருந்த நிலையில், தற்போது ரஜினியின் அடுத்தப் படத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
’தர்பார்’ படம் முடியும் தருவாயில் உள்ளதால், தனது அடுத்தப்படத்தில் ரஜினிகாந்த் இப்போதே ஆர்வம் காட்டி வந்தார். இதையடுத்து புதிய தயாரிப்பாளர் ஒருவருக்கு கால்ஷீட் கொடுக்க முடிவு செய்து அவர்களிடம் ரஜினி தரப்பு பேச்சு வார்த்தை நடத்தியதாம். தயாரிப்பு தரப்பும், ரஜினி கால்ஷீட் என்பதால் ஆர்வத்தோடு பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நிலையில், ரஜினியின் சம்பளமாக கேட்கப்பட்ட தொகையால் அதிர்ச்சியடைந்துவிட்டார்களாம். சுமார் 100 கோடி ரூபாய் வரை ரஜினி சம்பளம் கேட்டாராம். இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்து விட்டால், படத்தின் தயாரிப்பு செலவு, மற்ற நடிகர், நடிகைகள் சம்பளம் என்று மிகப்பெரிய பட்ஜெட் வரும் என்றும், அப்படி அந்த பட்ஜெட்டில் எடுத்தால் லாபம் பார்க்க முடியாது, என்றும் கருதிய அந்த தயாரிப்பாளர், ரஜினியின் படமே வேண்டாம், என்று பின் வாங்கிவிட்டாரம்.
இதனால், வேறு சில தயாரிப்பாளர்களிடம் ரஜினி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினாலும், அவர்களும் ரஜினியின் சம்பள தொகையால் பின்வாங்க தொடங்கியுள்ளார்கள். இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமே ரஜினிகாந்த் மீண்டும் செல்ல, அவர்களும் ரஜினியின் சம்பளத்தால் சற்று தயங்குவதாக கூறப்படுகிறது.
தற்போது ‘தர்பார்’ படத்திற்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளத்தை விட ரூ.20 கோடி கூடுதலாக கேட்கிறாராம். ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த கூடுதல் தொகையை ரஜினி கட் பண்ணால், படத்தின் அறிவிப்பை உடனே அறிவிக்க ரெடியாக இருக்கிறதாம். ஆனால், ரஜினிகாந்த் தரப்பில் இதுவரை சாதகமான பதில் வராததால், சன் பிக்சர்ஸும் ரொம்பவே யோசிப்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் ரஜினி தரப்பு குழப்பமடைந்திருக்கிறதாம்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...