‘மாநாடு’ படத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதையடுத்து, ரூ.120 கோடி பட்ஜெட்டில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை எடுக்கப் போகிறேன், என்று கெத்தாக அறிவித்த சிம்பு, கடந்த இரண்டு மாதங்களாக வெளிநாட்டில் தங்கியிருந்துவிட்டு தற்போது சென்னைக்கு திரும்பியுள்ளார்.
சிம்பு வருகைக்காக அவர் மீது அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்க தயாரிப்பாளர் சங்கம் ஒரு புறம் காத்திருக்க, ரசிகர்களை அழைத்து சிம்பு பேசப்போகிறார், என்று அவர் சென்னைக்கு வருவதற்கு முன்பு வெளியான அறிவிப்பால் சில ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்தார்கள். இதனால், சிம்பு அதிரடியாக எதையோ அறிவிக்கப் போகிறார் என்று ஒட்டு மொத்த மீடியாவும் காத்துக் கொண்டிருக்க, சிம்பு வந்த தடமே தெரியாத வகையில் அவரது ஏரியா ரொம்பவே அமைதியாக இருக்கிறது.
சிம்புவின் இந்த அமைதி குறித்து விசாரிக்கையில், புலியாக பாய்ந்த சிம்பு தற்போது பூனையாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதைவிட ஆச்சர்யம் என்னவென்றால், ‘மாநாடு’ தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, மீண்டும் அந்த படத்தில் தானே நடிக்கிறேன், என்று சிம்பு சொல்ல இருக்கிறாராம். இது தொடர்பாக அவர் இயக்குநர் வெங்கட் பிரபுவை தொடர்பு கொண்டு பேச, அவருக்கு ஓகே, எப்போது வேண்டுமானாலும் தயாரிப்பாளரை சந்திக்கலாம், என்று கூறியிருக்கிறாராம்.
ஆனால், அடிபட்ட புலி போல சிம்பு இருப்பதால் அவரை வைத்து மாநாடு படத்தை எடுக்கலாமா அல்லது வேறு ஹீரோவை வைத்து படத்தை தொடங்கலாமா, என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி யோசித்துக் கொண்டிருக்கிறாராம். அதே சமயம், சிம்பு சந்தித்து சுரேஷ் காமாட்சியிடம் நேரடியாக மன்னிப்பு கேட்டால், அவரும் மனம் மாறி, பழையபடி சிம்புவின் ‘மாநாடு’ என்ற விளம்பரம் விரைவில் வரலாம் என்றும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...