Latest News :

‘பப்பி’ அடல்டு படம் அல்ல, குடும்ப படம்! - கியாரண்டி கொடுத்த வருண்
Thursday October-03 2019

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசர் கே.கணேஷ் தயாரித்த ‘எல்.கே.ஜி’ மற்றும் ‘கோமாளி’ இரண்டு படங்களும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், மூன்றாவது படமாக ‘பப்பி’ வெளியாகிறது. ஐசரி கணேஷின் மருமகனான வருண் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில் சக்யுக்தா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருக்கிறார். யோகி பாபு எப்போதும் போல ஹீரோவுக்கு நிகரான வேடத்தில் நடித்திருக்கிறார்.

 

வரும் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

 

இதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசுகையில், “வேல்ஸ் ஃபிலிம்ஸ்ஸின் மூன்றாவது படம் ‘பப்பி’. கடந்த இரண்டு படங்களை போல இந்தப்படமும் பெரு வெற்றி பெறும். காலேஜ் செல்லும் இளைஞர்களுக்காகவே எடுத்திருக்கும் படம். அவர்கள் ரசிக்கும்படி இருக்கும். தரணின் இசையில் பாடல்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. பாடல்கள் அனைத்தும் பிரபலங்கள் பாடியுள்ளார்கள். வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் நல்ல படங்களை தருவதே எங்கள் நோக்கம். இந்தப்படத்தை அடுத்து ஜீவா நடிப்பில் சீர் படம்  வர இருக்கிறது. ‘பப்பி’ படத்தில் வருண் நாயகனாக காலேஜ் செல்லும் மாணவர்களுக்கு பிடித்த மாதிரி நடித்துள்ளார். படம் கண்டிப்பாக வெற்றி பெறும்.” என்றார்.

 

இசையமைப்பாளர் தருண் பேசுகையில், “இந்தப்படம் எனக்கு  ஒரு ஃபேமிலி புராஜக்ட் மாதிரி இருந்தது. அஸ்வின், வருணை சிறு வயதில் இருந்தே தெரியும். இந்தப் படத்தில் வருண் மிக எனர்ஜியுடன் இருந்தார். ஒரு புதுமுகமாக அட்டகாசமான நடிப்பை தந்துள்ளார். இயக்குநர் மிகவும் திறமையானவர், அவருடன் வேலை செய்தது நல்ல அனுபவம். ஹிரோயின் நேரில் பயங்கர கலகலப்பானவர், ஆனால் படத்தில் ரொம்பவும் அடக்கமான ரோலில் நடித்துள்ளார். படம் நன்றாக வந்திருக்கிறது. கௌதம் சார் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அனிருத், ஆர் ஜே பாலாஜி, யுவன் சங்கர் ராஜா ஆகிய அனைவரும் பாடல் பாடியுள்ளார்கள். என்னை மதித்து பாடல் பாடியதற்கு நன்றி.” என்றார்.

 

நாயகி சம்யுக்தா ஹெக்டே பேசுகையில், “கோமாளி படத்திற்கு முன்பே இந்தப்படத்தில் நடிக்க கமிட்டானேன். என்னை தேர்ந்தெடுத்தற்கு தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் நன்றி. இந்தப்படம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. வருண் மிக நல்ல நண்பராக மாறிவிட்டார். படத்தில் எங்கள் காட்சிகளில்  நீங்கள் அதைப்பார்க்கலாம். பாடல்கள் இந்தப்படத்தில் மிக முக்கிய பங்கை வகித்துள்ளது. படம் விரைவில் வெளியாகிறது. உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

நாயகன் வருண் பேசுகையில், “என்னை சின்ன,சின்ன கேரக்டரில் பார்த்திருப்பீங்க,  பப்பி படக்கதை கேட்டபோதே  நாம் நாயகனாக நடிக்க இதுவே சரியான கதை என்று தோன்றியது. இது என் வாழக்கையை, இளைஞர்களை பிரதிபலிக்கும் கதையாக இருந்தது. டிரெய்லரில் அடல்ட் மூவி மாதிரி இருக்கும் ஆனால் இது குடும்பத்துடன் பார்க்கும் க்யூட் லவ் மூவியாக இருக்கும். இதில் காமெடி, செண்டிமெண்ட் என எல்லாமே இருக்கிறது. இயக்குநர் மிகவும் திறமையானவர். அவர் செய்வதில் பாதியை செய்தாலே போதும். இந்தப்படத்தில் ரசித்து ரசித்து வேலை பார்த்துள்ளேன். இந்தப்படத்தில் 6 நிமிடக் காட்சி ஒன்று உள்ளது அது கண்டிப்பாக பேசப்படும் என நம்புகிறேன். சம்யுக்தா வேறு ஒரு படத்திற்காகத்தான் முதலில் வந்தார். மிக நெருங்கிய நண்பராக மாறிவிட்டார். அவருடன் காதல் காட்சிகளில் நெருக்கமாக  நடிப்பது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. இயக்குநர் அதை உடைத்து நன்றாக எடுத்திருக்கிறார். யோகிபாபுவுடன் முதல் இரண்டு நாட்கள் நடிக்க தயக்கமாக இருந்தது. அதன் பிறகு மிகவும் நெருக்கமாகி விட்டார். இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்புகிறேன். இளைஞர்களுக்கு மட்டுமல்லாது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இது இருக்கும். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அனைவருக்கும் நன்றி. கனவிலேயே வாழும் அனைத்து மொரட்டு சிங்கிள்களுக்கும் இந்தப்படம் சமர்ப்பணம்.” என்றார்.

 

இயக்குநர் மொரட்டு சிங்கிள் பேசுகையில், “இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமான மேடை. 7 வருடங்களுக்கு முன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் இப்போது மேடையேறி இருக்கிறேன். என் அப்பா அம்மா எனக்கு அனைத்தையும் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வெற்றியை சமர்பிக்கிறேன். காக்கா முட்டை மணிகண்டன் சாரிடம் வேலை பார்த்த போது படத்தின் திரைக்கதையை பிரிண்ட் எடுக்க எங்களிடம் காசு இல்லை. அவர் உண்டியலை உடைத்து தான் பிரிண்ட் எடுத்தோம். தான் செய்வது சரியாக இருக்க வேண்டும் என நினைப்பவர் அவர்.  அந்தப்படம் இன்று இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது. அவரது பெயரைக் கெடுப்பது போல் இந்தப்படம் இருக்காது. இது A படம் கிடையாது இது U படம். தயரிப்பாளர் ஒரு தந்தையை போல் தான் இருந்தார். அவரது கனவை நான் நிறைவேற்றி இருக்கிறேன். யோகிபாபுவை காக்கா முட்டை படத்திலிருந்தே தெரியும். இன்று அவர் இருக்கும் உயரம் அவருக்கு தகுதியான இடம். அவர் எனக்காக இந்தப்படம் செய்துள்ளார். வருண் இந்தப்படத்தில் தன் முழுத்திறமையையும் தந்துள்ளார். சம்யுக்தாவை இந்தப்படத்தில் எல்லோருக்கும் பிடிக்கும். படம் கண்டிப்பாக வெற்றி பெறும்.” என்றார்.

Related News

5703

சிக்னல்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் தான் ‘அப்பு’ படம் உருவாக தூண்டுதலாக இருந்தார்கள் - இயக்குநர் வசீகரன் பாலாஜி
Wednesday October-02 2024

ஆர்.கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வீரா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அப்பு’...

1500 திரையரங்குகளில் ஓளிபரப்பாகும் ‘வெனோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ பட டிரைலர்!
Tuesday October-01 2024

உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...

Recent Gallery