Latest News :

ஒரு ஆக்‌ஷன் காட்சிக்கு ரூ.1 கோடி செலவு! - பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘அருவம்’
Thursday October-03 2019

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் தயாரிக்கும் ‘அருவம்’ படத்தை அறிமுக இயக்குநர் சாய்சேகர் இயக்குகிறார். இப்படத்தில் சித்தார்த், காத்ரீன் தெரசா நடித்திருக்கிறார்கள். எஸ்.எஸ்.தமன் இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

 

வரும் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்ப் சமீபத்தில் நடைபெற்றது.

 

இந்த சந்திப்பில் பேசிய ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், “இந்தப்படம் எனக்கு  ஒரு வித்தியாசமான அனுபவம். கிளைமாக்ஸ் வரும்   ஒரு ஆக்சன் காட்சிக்கு ஒரு கோடி செலவு செய்துள்ளார் தயாரிப்பாளர் பிரமாண்டமாக வந்துள்ளது. சித்தார்த் எப்போதும் டெக்னிக்கலாக  அப்டேட்டாக இருப்பார். நாம் புதிதாக என்ன செய்தாலும் பாராட்டுவார். காத்ரீன் இரு வேறு லுக்கில் வருவார். படம் நீங்கள் எதிர்பார்த்த்தை விட அதிக திருப்தி அளிக்கும் படைப்பாக இருக்கும்.” என்றார்.

 

இயக்குநர் சாய்சேகர் பேசுகையில், “நான் ரவீந்தரன் சாருக்கு படம் செய்தது புண்ணியம் என நினைக்கிறேன். சித்தார்த் இயல்பிலேயே இந்தக் கேரக்டருக்கு பொருந்திப்போகக் கூடியவர். நிஜத்தில் சுத்தத்தை போற்றக்கூடியவர் உயிர்களை  நேசிப்பவர். அவர் தான் இந்தப்படத்திற்கு வேண்டும் என்று நினைத்து அவருக்காகவே எழுதினோம். அருவம் என்பது உருவம் இல்லாத ஒன்று. கதையில் அதற்கான காரணம் இருக்கும். ஏகாம்பரம் மிக சுறுசுறுப்பானவர். தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பானது. காத்ரீன் தெரசாவை நிறைய கஷ்டப்படுத்தியிருக்கிறோம் ஆனால் அவர் தன்  காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து உழைத்துள்ளார். பின்னணி இசையில் அற்புதம் செய்துள்ளார் தமன். கிளைமாக்ஸ்  காட்சியாக வரும்  இரவுக்காட்சியை பகலில் எடுத்திருக்கிறோம். மிகப்பிரமாண்டமானாதாக இருக்கும். ஏகாம்பரம் விஷுவலாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். படம் நன்றாக வந்திருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை. பாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

காத்ரீன் தெரசா பேசுகையில், “அருவம் படத்தின் கதையை கேட்டபோது முதலில் எனக்குப் பிடித்தது அந்தப்படத்தில் இருந்த பெண் பாத்திரத்திற்கான முக்கியத்துவம் தான். பல படங்களில் இது இருப்பதில்லை. மிக வித்தியாசமாக அதிக முக்கியத்துவம் கொடுத்து அந்த கேரக்டர் எழுதப்பட்டிருந்தது. ஜோதி எனும் கேரக்டரை செய்வதில் உள்ள  சாவால்களை விரும்பி ஏற்றேன். சித்தார்த் உடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அவர் சீரியஸானவர் என நினத்தேன் ஆனால் அவர் ஜாலியாக இருந்தார். இயக்குநர் இந்தப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். நாங்கள் அனைவரும் எங்கள் உழைப்பை தந்திருக்கிறோம். இரண்டே பாடல்கள் தான் ஆனால் நன்றாக வந்துள்ளது நீங்கள் கேட்டிருப்பீர்கள். மிக விரைவில் படம் வெளியாகிறது உங்களை எல்லாம் சந்தோஷப்படுத்தும் படமாக இருக்கும்.” என்றார்.

 

நடிகர் சித்தார்த் பேசுகையில், “ரவி சார் போன் செய்து கமர்ஷியல் படம் இருக்கு கேட்கீறீங்களா  என்றார். நான் எப்போதும் ரொம்பவும் தேர்ந்தெடுத்து தான் படம் செய்வதாக சொல்கிறார்கள். ஆனால் நான் எந்தப்படத்தையும் எல்லோரும் பார்க்க வேண்டும் என்று தான் செய்கிறேன். இப்படத்தில் நம் உணவில் கலப்படம் பரவுவதை சொல்லும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு கதை இருந்தது. எனது கேரக்டர் சமூகத்தின் மீது கோபம் உள்ள கேரக்டர் எனக்கு உண்மையில் பொருந்தி போகக்கூடியது. அதற்காகத்தான் இந்தப்படம் செய்தேன். சில்வாவையும் ஏகாம்பரத்தையும் பல காலமாக தெரியும் தம்பி, தம்பி என என்னை பெண்டெடுத்துவிட்டார்கள். படத்தின் விஷிவலுக்காகத்தான் இத்தனை உழைப்பும். காத்ரீனுக்கு இந்தப்படத்தில் மிகவும் கனமான கேரக்டர். எப்போதும் ஹீரோவுக்கு இணையாக ஹீரோயினுக்கு பாத்திரம் இருக்க வேண்டும் என்று நினைப்பேன் அப்படி இருந்தால் படம் நன்றாக இருக்கும் இந்தப்படத்தில் அது சரியாக அமைந்துள்ளது. சதீஷை காமெடியனாகத்தான் எல்லோரும் நினைக்கிறோம் ஆனால் அவருக்குள் ஒரு அற்புதமான குணச்சித்திர நடிகர் உள்ளார். அதை இந்தப்படத்தில் பார்க்கலாம். நிறைய உழைத்திருக்கிறோம். எல்லோருக்கும் பிடிக்கும்படி படம் இருக்கும்.” என்றார்.

Related News

5704

ரூ.10 கோடிக்காக தனுஷ் மீது பரபரப்பு குற்றம் சாட்டிய நயன்தாரா!
Saturday November-16 2024

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...

”பயம் கலந்த சந்தோஷத்துடன் தான் சம்மதித்தேன்” - மனம் திறந்த நடிகர் அதர்வா
Saturday November-16 2024

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...

“சித்தார்த்தின் ரொமாண்டிக் கம்பேக் படமாக ‘மிஸ் யூ’ இருக்கும்” - இயக்குநர் என்.ராஜசேகர்
Friday November-15 2024

7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில்,  இயக்குநர் என்...

Recent Gallery