17 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் ஆதரவோடு, இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் (ICAF) நடத்தி வரும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் இந்த ஆண்டுக்கான விழா 17 வது ஆண்டாக வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இவ்விழாவின் போஸ்டர் மற்றும் லோகோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிலிம் சேம்பரில் நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ, இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் தலைவர் கண்ணன், துணை தலைவர் இராமகிருஷ்ணன், பொது செயலாளர் தங்கராஜ், பிலிம் சேம்பர் தலைவர் கட்ரகட்ட பிரசாத் மற்றும் நிர்வாகிகள், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், நடிகை ரோகினி, ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவில் திரைத்துறை பிரபலங்கள் இயக்குநர் நடிகர் பார்த்திபன், ரோகிணி, இயக்குநர்கள் சங்க செயலாளர் தலைவர் ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கு தேர்வாகியுள்ள திரைப்படங்கள் தேவி, தேவிபாலா, அண்ணா, காசினோவா, ரஷ்யன் கலாச்சார கழகம் மற்றும் தாகூர் அரங்கத்தில் திரையிடப்பட இருக்கிறது.
உலக சினிமா, போட்டியில் பங்கு பெறும் தமிழ் திரைப்படங்கள், இந்திய பனோரமா, குறிப்பிட்ட இயக்குனர்களின் முந்தைய சாதனை திரைப்படங்கள், குறிப்பிட்ட நாடுகளின் சிறந்த திரைப்படங்கள் ஆகியன பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகிறது.
தமிழ் திரைப்பட போட்டிக்கான மொத்த பரிசு தொகை ரூ.6 லட்சமாகவும், இளம் சாதனையாளர் விருதுக்கு ரூ.1 லட்சமாகவும் இருக்கும்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...