கடந்த 18 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நாயகியாக வலம் வரும் ஸ்ரேயா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கியுள்ளவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு 35 வது வயதில் அடியெடுத்து வைத்தார்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் அவரிடம் “எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள்? என்று கேட்டதற்கு, பெரும் கோபமடைந்த ஸ்ரேயா, ”இந்த கேள்வியை 50 வயதை கடந்த கதாநாயகர்களிடம் போய் கேட்பீர்களா? ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்வி கேட்பது பைத்தியகாரத்தனம். அதுபோல் திருமணத்துக்கு பின் பெண்களிடம் அழகும், கவர்ச்சியும் குறைந்துவிடும் என்று சொல்வது தவறானது.
பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் நடிப்பு திறமை பாதிக்கப்படாது. அவர்களுடைய நடிப்பு பயணத்தையும் அது எந்தவிதத்திலும் பாதிக்காது. ஒரு நடிகையிடம் கேள்வி கேட்பவர்கள், 60 வயதை கடந்து 20 வயது நாயகிகளுடன் ‘டூயட்’ பாடும் நடிகர்களைப் பார்த்து ஏன் எதுவும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்” என்று சூடாக பதில் அளித்துள்ளார்.
ஸ்ரேயாவின் இந்த பதில் தான் தற்போது தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...