திரைப்படங்களில் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும், விவசாயிகளின் நலன் குறித்தும் பேசும் பல நடிகர்கள் நிஜத்தில் விவசாயிகளின் பக்கம் கூட செல்வதில்லை. ஆனால், விஜய் சேதுபதியின் ரசிகர்கள், ‘சங்கத்தமிழன்’ படத்தின் ரிலீஸை முன்னிட்டு விவசாயி ஒருவருக்கு ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிர் வைப்பதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டதோடு, அவருக்கு தோள்கொடுத்து விவசாய பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘சங்கத்தமிழன்’ படம் தீபாவளியன்று வெளியாக உள்ளது. இப்படம் வெளியீட்டின் போது பேனர், கட்-அவுட் போன்றவற்றை வைக்க கூடாது, என்று முடிவு செய்திருக்கும் விஜய் சேதுபதி ரசிகர்கள், அதற்கு மாறாக விவசாயிகளுக்கு விதை பந்து மற்றும் மரக்கன்றுகள் வழங்க முடிவு செய்திருந்தனர்.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சியை சேர்ந்தவரிடம் விவசாயி பிரகாஷ் என்பவர் தனது நிலத்தில் நெல் பயிர் செய்வதற்காக வடிக்கு கடன் கேட்டிருக்கிறார். இந்த தகவலை அறிந்த விஜய் சேதுபதி ரசிகர்கள் பிரகாஷை தொடர்பு கொண்டு பேசியதோடு, அவரை நேரடியாக சந்தித்து அவர் நெல் பயிய் செய்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து கொடுப்பதாக உறுதியளித்தனர்.
அந்த வகையில், விவசாயி பிரகாஷின் ஒரு ஏக்கர் நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது, நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகளை செய்த ரசிகர்கள், அவருக்கு ரூ.10 ஆயிரம் பணமும் வழங்கியுள்ளனர். இதன் மூலம் ஒரு பைசா செலவு இல்லாமல் அனைத்து செலவுகளையும் விஜய் சேதுபதி ரசிகர்களே ஏற்று, விவசாயி பிரகாஷின் நிலத்தில் நெல் பயிரிட்டு புதிய விவசாய புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...