100 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பி வந்த பிக் பாஸ் சீசன் 3 நேற்று இரவோடு முடிந்தது. நாம் ஏற்கனவே சொன்னது போல முகேன் ராவ், டைடில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 7 கோடிக்கும் மேலான வாக்குகள் கிடைத்ததாலயே அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாம் இடத்தை பிடித்த சாண்டிக்கு 5 கோடிக்கு மேலான வாக்குகள் கிடைத்திருக்கிறது. மொத்தமாக 20 கோடி மக்கள் வாக்களித்ததாக கூறப்பட்டது.
ஆனால், உண்மையில் முகேன் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று தான். இதையும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க கதை, திரைக்கதை எழுதி இயக்கப்படம் சீரியல் போல தான். அதிலும், முதல் இரண்டு சீசனில் இல்லாத பல விஷயங்கள் இந்த மூன்றாவது சீசனில் இருந்தது. அதற்கு காரணம் டி.ஆர்.பி ரேட்டிங் தான்.
மேலும், லொஸ்லியா, தர்ஷன், முகேன் என வெளிநாட்டு வாழ் தமிழர்களை போட்டியாளராக்கிய தமிழகத்தை கடந்து வெளிநாடுகளிலும் விஜய் டிவியை பிரபலப்பத்துவதற்காக தான். அதனால், வெற்றியாளராக வெளிநாட்டு வாழ் தமிழர் தான் தேர்வு செய்யப்படுவார், என்று நாம் முன்னதாக கூறியபடியே நேற்று நடந்திருக்கிறது.
முகேனை வெற்றியாளராக அறிவித்தால், பிக் பாஸ் நிகழ்ச்சி வெளிநாடுகளிலும் பிரபலமாகும் என்பதால் தான், அவரை போட்டியாளராக அறிவித்திருக்கிறார்கள். மக்களின் இறுதி வாக்குகள் மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...