தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கும் ‘அசுரன்’ படம் தொடர்பாக யார் என்ன பேசினாலும், படம் விமர்சனம் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. தனுஷ் ரசிகர்கள் மட்டும் இன்றி சினிமா விரும்பிகள் அனைவரும் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
படத்தில் நடித்த தனுஷை எப்படி பாராட்டுகிறார்களோ அதே அளவுக்கு அவரது மகன்களாக நடித்த டிஜே மற்றும் கென் கருனாஸையும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அதிலும், தனுஷின் இளையமகனாக படம் முழுவதும் வரும் கென் கருணாஸ், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போவதோடு, நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்.
காமெடி நடிகர், ஹீரோ, தயாரிப்பாளர், இசையமைப்பாளர் பாடகர் என்று சினிமாவில் பல துறைகளில் பயணித்து, தற்போதும் தொடர்ந்து நடித்துக் கொண்டே, எம்.எல்.ஏ பணியையும் மேற்கொண்டு வரும் கருணாஸின் மகனான கென்னுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடம் கிடைக்கும், என்று அசுரன் படத்தை பாராட்டும் அனைவரும் ஆரூடம் கூறுகிறார்கள்.
அப்பாவை போல இசை, நடனம் என அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருக்கும் கென், கதை தேர்வில் கவனம் செலுத்தினால் நிச்சயம் கோலிவுட்டின் டாப் ஹீரோ லிஸ்ட்டில் இடம் பிடிப்பார் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ‘அசுரன்’ படத்தில் தனுஷ் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சி, ஒரே டேக்கில் மூன்று கேமராக்கள் வைத்து படமாக்கப்பட்டதாம். 15 நிமிடம் நீளம் கொண்ட அந்த காட்சி படமாக்கப்பட்ட போது தனுஷின் அர்ப்பணிப்பை பார்த்து கென், மிரண்டு போய்விட்டாராம். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கென் பதிவிட்டுள்ளார்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...