திருட்டு விசிடி மற்றும் இணையத்தில் சட்டவிரோதமாக புதுப்படங்களை பதிவேற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக விஷால் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று சென்னை திருவல்லிக்கேணி போலீசார், இண்டர்நெட்டில் புதுப்படங்களை பதிவேற்றும் செய்யும் நபர் ஒருவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘துப்பறிவாளன்’ நாளை (செப்.13) உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தை இண்டர்நெட்டில் வெளியாகமல் தடுப்பதற்காக விஷால் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, தியேட்டர்களில் இருந்து செல்போனில் படத்தை படம்பிடித்து நெட்டில் பதிவேற்றுவதை தடுப்பதற்காகவும், அப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுபவர்களை கண்காணித்து காவல் துறையினரிடம் ஒப்ப்டைப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்கள் மூலம் விஷால் பறக்கும் படை ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இவர்கள் ஐந்து பேர் கொண்ட குழக்களாக தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், எல்லா காட்சிகளிலும் கண்காணிக்க உள்ளனர். இந்த பறக்கும் படையில் உள்ள விஷால் ரசிகர்களுக்கு பிரத்யேக பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாம்.
80-களின் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் வலம் வந்த நடிகை அம்பிகா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவரது முகத்தோற்றம் கொண்ட ஒரு நடிகையை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு ஒன்று முயற்சித்து வருகிறது...
இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்...
’வேற மாரி ஆபிஸ்’, ‘வேற மாறி லைவ் ஸ்டோரி’ தொடர்கள் மற்றும் ‘மால்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த விஜே பப்பு, ‘ராகவன் : Instinct’ என்ற இணையத் தொடர் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்...