படத்தின் தலைப்பை உச்சரித்தாலே நம்முள் ஒரு ஈர்ப்பு வரும் விதத்தில் இருக்க, படம் மட்டும் சாதரணமாக இருக்குமா?, இதுவரை தமிழ் சினிமாவில் கையாளப்படாத ஒரு களமாக இருந்த ‘தோழர் வெங்கடேசன்’ திரைப்படம் எளிய மக்களின் வாழ்வினை காட்ட முயன்ற படமாக அமைந்ததானலேயே இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
கடந்த ஜூலை மாதம் வெளியாகி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த இப்படம், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு பெற்றது. சிறப்பான படமாக இருந்தாலும், அது சிறிய படம் என்றால், தமிழ் சினிமா வியாபாரிகள் அதை எளிதில் புறக்கணித்துவிடுவார்கள், அப்படி ஒரு நிலை தான் ‘தோழர் வெங்கடேசன்’ படத்திற்கும் ஏற்பட்டது. இருப்பினும், ஊடகங்களும், விமர்சகர்களும் படத்தை கொண்டாடி தீர்த்தனர். ஆனாலும், எதிர்ப்பார்த்தது போல படம் ரசிகர்களை சென்றடையவில்லையே என்று படக்குழு கவலைப்பட்டது.
அதன் பிறகு இப்படத்தை பார்க்க பலர் விரும்பினாலும் தியேட்டரில் படம் இல்லை என்பது அனைவருக்கும் வருத்தம். தற்போது அந்த வருத்தத்தை போக்கும் விதமாக ‘தோழர் வெங்கடேசன்’ படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி வருகிறது. டிஜிட்டல் தளத்தில் இப்படம் வெளியான சில நாட்களிலிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பது படக்குழுவினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளித்துள்ளது. மேலும், இப்படத்தின் ஒரு பாடலை பேஸ்புக் வழியாக ஒன்றரை கோடி பேர் பார்த்துள்ளார்களாம்.
அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கிய இப்படத்தில் அறிமுக நாயகன் அரி சங்கர், நாயகியாக மோனிகா சின்ன கோட்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வாழ்வில் என்ன கஷ்டப்பட்டாலும் முதலாளியாகத்தான் வாழ்வேன் என அடம்பிடிக்கும் இளைஞர் வெங்கடேசன். தன் கஷ்டங்களை சந்தோஷமாக்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். தன்னை வேண்டாம் என்ற பெண்ணுக்கே அடைக்கலம் தரும் சூழல் உருவாக, அவளுடன் காதலில் விழுகிறார். வாழ்வு வசந்தமாக மாறும் சூழலில் அரசுப் பேருந்தின் விபத்தில் சிக்க, அரசுடன் இழப்பீட்டுக்காக போராடுகிறார். அரசுக்கும் அவருக்கும் நடக்கும் போராட்டத்தில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.
நம் தெருவில், பக்கத்து வீட்டில் வாழும் ஒரு எளிய மனிதராக மக்கள் மனதில் இடம் பிடித்த இப்படத்தின் ஹீரோ அரி சங்கரின் நடிப்பை பார்த்தவர்கள் அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள். காரணம், புதுமுகம் போல அல்லாமல் பல படங்களில் நடித்த அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதுமட்டும் இன்றி, இரண்டு கைகளை இழந்தவராக அவர் நடித்த விதம் அனைவரையும் கண்கலங்க வைத்ததோடு, கவர்ந்தும் விட்டது.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...