கடந்த ஆண்டு மலையாளத்தில் பிரேமம் தென்னிந்தியா முழுவதும் பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது போல, இந்த அண்டு தெலுங்குப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ தென்னிந்தியா முழுவதும் பேச வைத்துள்ளது. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் சுமார் 50 கோடி ரூபாயை வசூல் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர், அறிமுக ஹீரோ மற்றும் அறிமுக நாயகி என்று அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் படம் மாபெரும் வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தின் இந்தி மற்றும் தமிழ் ரீமேக் உரிமையை பெற பல நடிகர்ள் முயற்சித்து வருகிறார்கள். தமிழ் ரீமேக்கை பெற தனுஷ் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தமிழ் மற்றும் இந்தி ரீமேக் உரிமையை இதுவரை யாருக்கும் வழங்கவில்லை, என்று அர்ஜுன் ரெட்டி தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அர்ஜுன் ரெட்டி படத்தில் நாயகியாக நடித்துள்ள ஷாலினி பாண்டேவை ஜி.வி.பிரகாஷ் தனது படத்திற்கு நாயகியாக்கியுள்ளார். அர்ஜுன் ரெட்டியை ரீமேக் செய்யும் போது, தெலுங்கில் நடித்த ஷாலினி பாண்டேவையும் தமிழில் அறிமுகப்படுத்தலாம் என்று தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், சத்தமே இல்லாமல் ஷாலினியை தனக்கு நாயகியாக்கிக் கொண்டு, தனுஷ் உள்ளிட்டவர்களை பின்னுக்கு தள்ளியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்குமார்.
தெலுங்கில் வெளியான 100% லவ், படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இதற்கு இசையமைத்து ஹீரோவாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், இந்த படத்தின் மூலம் தான் ஷாலினி பாண்டேவை கதாநாயகியாக தமிழில் அறிமுகப்படுத்துகிறார்.
80-களின் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் வலம் வந்த நடிகை அம்பிகா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவரது முகத்தோற்றம் கொண்ட ஒரு நடிகையை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு ஒன்று முயற்சித்து வருகிறது...
இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்...
’வேற மாரி ஆபிஸ்’, ‘வேற மாறி லைவ் ஸ்டோரி’ தொடர்கள் மற்றும் ‘மால்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த விஜே பப்பு, ‘ராகவன் : Instinct’ என்ற இணையத் தொடர் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்...