Latest News :

ஆர்.பி.பாலா தயாரிக்கும் ‘அகோரி’
Monday July-17 2017

சமீபத்தில் தமிழ்ச் சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்த படம் 'புலிமுருகன்'. இது  மோகன்லால் நடிப்பில் வந்த பிரம்மாண்ட வெற்றிப் படமாகும்.  அந்த 'புலிமுருகன்'  படத்தை  தமிழில் வழங்கியவர் ஆர்.பி.பாலா. அவர்  தயாரிக்கும்  புதிய படம்  'அகோரி' .

 

ஆர்.பி. பிலிம்ஸ் வழங்கும் ஆர்.பி.பாலாவின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர்.டி.எஸ்.ராஜ்குமார் இயக்கும் படம் 'அகோரி' . இப்படத்துக்கு , வசனத்தை ஆர்.பி.பாலா எழுத ஒளிப்பதிவு செய்கிறார் ஆர்.ஷரவணகுமார்,இசை.பிரசாந்த் கே கே, சண்டைப் பயிற்சி-.டேஞ்சர் மணி, நடனம் -பூபதி, கதாநாயகனாக, சித்து, ஆதவ், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

 

"அகோரி" என்கிற இந்தப் பிரம்மாண்ட படத்தின் பூஜை மற்றும் தொடக்கவிழா ஏ.வி.எம் ஸ்டுடியோவில் இன்று மிகச் சிறப்பாக நடந்நது.. படத்தைப்பற்றி இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் கூறுகையில் '' இப்படத்தின் கதை, திரைக்கதையை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைத்துள்ளோம். அது மட்டுமின்றி இப்படத்தில் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களை  பணியாற்ற வழியமைத்துக் கொடுத்த எங்கள் தயாரிப்பாளர் ஆர்.பி.பிலிம்ஸ் ஆர்.பி.பாலா  அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.'' என்றார்.

 

தயாரிப்பாளர் ஆர்.பி.பாலா கூறுகையில், “'எனது முதல் படமான "அகோரி" தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் மிகப்பெரிய முத்திரை பதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காரணம் இப்படத்தின் கதைக்களமும் கையாளும் விதமும் புதிய கோணத்தில் இருக்கும். இதற்கு எங்கள் படத்தின் தலைப்பு "அகோரி"  என்பதே ஓர் உதாரணம் எனலாம்.” என்றார்.

Related News

58

‘மட்கா’ படத்திற்காக ரூ.15 கோடியில் உருவாக்கப்பட்ட பழமையான வைஸாக் நகரம்!
Friday June-28 2024

கருணா குமர் இயக்கத்தில், வருண் தேஜ் நடிப்பில் உருவாகும் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படம் ‘மட்கா’...