வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பெரும் சேவை செய்யும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் சேவையான ’ஹீரோ டாக்கீஸ்’ ’ஷூட் தி பைரேட்ஸ்’ என்ற 24 மணி நேரம் இடை விடாத, பைரஸிக்கு எதிரான பிரச்சாரத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி காலை 11 மணிக்கு பிரசாத் லேபிள் தொடங்க உள்ளனர்.
இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த பிரச்சாரத்தில், தலைப்புகளில் பேச்சு, கலந்துரையாடல்கள், விளக்கக்காட்சிகள், குழு விவாதங்கள் ஆகியவை சினிமா பிரபலங்களோடும், பிரபலங்கள் தலைமையிலும் நடத்தப்பட உள்ளது. இந்த ’ஷூட் தி பைரேட்ஸ்’ நிகழ்வு ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (Asia Book Of Records) மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (Indian Book Of Records) ஆகியவையால் ‘Longest Anti Piracy Campaign’ என அடையாளம் காணப்படவுள்ளது.
இந்த காம்பைனில் பல சினிமா சாதனையாளர்களும் சினிமா பிரபலங்களும் கலந்துக் கொள்ள உள்ளனர். இந்த ’ஷூட் தி பைரேட்ஸ்’ நிகழ்வை 'மீசைய முறுக்கு'' புகழ் RJ விக்னேஷ் தொகுத்து வழங்கவுள்ளார்.
ஒரு படம் எடுக்க சந்தித்தாக வேண்டிய சிரமங்கள், தமிழ் சினிமாவை எந்த அளவிற்கு பைரசி பாதிக்கின்றது, தயாரிப்பாளர் மற்றும் நுகர்வோர் கண்ணோட்டத்தில் சினிமா வணிகம் எப்படியுள்ளது, பைரசியை தடுக்க தேவையான நடவடிக்கைகள், தமிழ் சினிமாவின் தற்போதய ட்ரெண்ட்டுகள் மற்றும் தமிழ் சினிமா துறையின் டிஜிட்டல் பரிமாணம் போன்ற பல்வேறு தலைப்புகளில் விவாதங்களும், கலந்துரையாடல்களும், ஆய்வுகளும் நடத்தப்படவுள்ளன.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...