Latest News :

இந்த விஷயத்தில் ஸ்ருதி ஹாசனை மிஞ்ச ஆள் இல்லையாம்!
Wednesday November-13 2019

இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், திடீரென்று இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில், திடீரென்று நடிப்பு மற்றும் இசை இரண்டையும் ஓரம் கட்டிவிட்டு காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினார். இதனால், ஸ்ருதி ஹாசன் தனக்கு நடிக்க வரும் வாய்ப்புகள் அனைத்தையும் நிராகரித்து வந்தார்.

 

இதனால், விரைவில் திருமணம் செய்துக் கொண்டு தனது வெளிநாட்டு கணவருடன் செட்டில் ஆகிவிடுவார், என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று தனது காதலை முறித்துக் கொண்டவர் மீண்டும் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியிருக்கிறார்.

 

தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘லாபம்’ படத்தில் நடித்து வருபவர், பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடிப்பதற்காக கதைக் கேட்டிக் கொண்டிருக்கிறாராம்.

 

இந்த நிலையில், டிஸ்னி தயாரிப்பில் உருவாகியுள்ள உலகப் புகழ் பெற்ற அனிமேஷன் படமான ‘ஃபோர்ஸன் 2’ (Frozen 2) படத்தின் தமிழ் பதிப்பில் முக்கிய கதாபாத்திரத்திற்கு ஸ்ருதி ஹாசன் டப்பிங் பேசியிருக்கிறார்.

 

வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படத்திற்கு வசனம் மற்றும் பாடல் எழுதிய விவேக், அன்னா கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசிய விஜே டிடி, எல்சா கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசிய ஸ்ருதி ஹாசன் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

 

Frozen 2 Press Meet

 

நிகழ்ச்சியில், டப்பிங் குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன், தான் நடிக்கும் படங்களுக்கு டப்பிங் பேசும் போது, அந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் நினைவுக்கு வரும். அப்போது, இந்த காட்சியை அப்படி செய்திருக்கலாம், இப்படி செய்திருக்கலாம், என்று யோசிக்க தோன்றும். ஆனால், இந்த படத்திற்கு டப்பிங் பேசும் போது அப்படி எதுவும் தோன்றவில்லை என்பதோடு வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது, என்றார்.

 

நீங்கள் நடித்த படங்களுக்கு டப்பிங் பேச எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வீர்கள், இந்த படத்திற்கு எத்தனை நாள் எடுத்துக் கொண்டீர்கள்? என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, “டப்பிங் என்பது எனக்கு சிறு வயதில் இருந்தே தெரிந்த வேலை தான். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் பல படங்களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு நான் சிறு வயதிலேயே டப்பிங் பேசியிருப்பதால், டப்பிங் எனக்கு ஈஸியான வேலை தான். அதனால், நான் வேகமாக முடித்துவிடுவேன். நான் நடித்த படங்களுக்கு ஒரு நாள் அல்லது ஒன்றரை நாளில் டப்பிங் பேசிவிடுவேன், ’ஃபோர்ஸன் 2’ படத்தின் டப்பிங்கை ஒரே நாளில் முடித்துவிட்டேன், என்றார்.

 

அப்போது ஒருவர், பொதுவாக ஹீரோயின்கள் டப்பிங் பேச அதிக நாட்கள் எடுத்துக் கொள்வார்கள், என்ற போது, ஆமாம், நிறைய பேர் சொல்வாங்க, ஹீரோயின்கள் டப்பிங் முடிக்க நான்கு அல்லது ஐந்து நாட்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று, ஆனால் நான் அதிகபட்சம் ஒன்றரை நாளில் டப்பிங்கை முடித்துவிடுகிறேன், என்று ஸ்ருதி பெருமையாக சொன்னார்.

 

Shruthi Hassan in Frozen 2

 

மொத்தத்தில், வேகமாக டப்பிங் பேசுவதில் ஸ்ருதி ஹாசனை எந்த ஹீரோயினாலும் மிஞ்ச முடியாது போலிருக்கு.

Related News

5867

சிக்னல்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் தான் ‘அப்பு’ படம் உருவாக தூண்டுதலாக இருந்தார்கள் - இயக்குநர் வசீகரன் பாலாஜி
Wednesday October-02 2024

ஆர்.கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வீரா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அப்பு’...

1500 திரையரங்குகளில் ஓளிபரப்பாகும் ‘வெனோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ பட டிரைலர்!
Tuesday October-01 2024

உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...

Recent Gallery