Latest News :

’காவியன்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ்
Monday July-17 2017

நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ”  K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார்.  ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் கா-வியன் “ என்றும் தெலுங்கில் “ வாடு ஒஸ்தாடு “ என்றும் பெயர்  சூட்டப்பட்டுள்ளது.

 

ஷாம் ஜோடியாக ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட்  நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார்.

 

ஒளிப்பதிவு - என்.எஸ்.ராஜேஷ் குமார், இசை - ஷ்யாம் மோகன், பாடல்கள் - மோகன்ராஜ், கலை - டி.என்.கபிலன், நடனம் - விஷ்ணுதேவா, எடிட்டிங் - அருண்தாமஸ், மக்கள் தொடர்பு - மணவை புவன், தயாரிப்பு - 2M cinemas கே.வி.சபரீஷ், எழுத்து இயக்கம் -  சாரதி

 

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மோஷன் போஸ்டரை இயக்குனர், நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று வெளியிட்டார்.

 

மோஷன் போஸ்டர்,டிரைலர் இரண்டையும் பார்த்த அவர் நன்றாக  இருப்பதாக சொல்லி படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Related News

59

‘மட்கா’ படத்திற்காக ரூ.15 கோடியில் உருவாக்கப்பட்ட பழமையான வைஸாக் நகரம்!
Friday June-28 2024

கருணா குமர் இயக்கத்தில், வருண் தேஜ் நடிப்பில் உருவாகும் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படம் ‘மட்கா’...